பேர்சிஃபார்மீசு
From Wikipedia, the free encyclopedia
பெர்சிபார்மிசு (Perciformes)(/ˈpɜːrsɪˌfɔːrmiːz/), என்பது பெர்கோமார்பா அல்லது அகாந்தோப்டெரி என்றும் அழைக்கப்படுகிறது. இது கதிர் மீனின் ஒரு வரிசை அல்லது மீப்பெரும் வரிசை ஆகும். இதனை ஒற்றை வரிசையாகக் கருதினால், இவை முதுகெலும்பு உயிரிகளை மிக அதிகமாக கொண்டுள்ள வரிசையாகும், இதில் 41% எலும்பு மீன்கள் உள்ளன. பெர்சிபார்மிசு என்றால் "பரண் போன்றது" என்று பொருள். பெர்சிபார்மிசு என்பது "பரண் போன்ற" பெர்கோமார்பு மீன்களை கொண்ட உட்கிளையான பெர்கோமார்பாவில் உள்ள ஒரு வரிசையாகும். இவை அனைத்து நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளிலும் காணப்படும். சுமார் 10,000 சிற்றினங்கள் இந்தக் குழுவில் உள்ளன. இந்த வரிசையில் சுமார் 160 குடும்பங்கள் உள்ளன. இது முதுகெலும்புகளுக்குள் இருக்கும் எந்த வரிசையினைக் காட்டிலும் அதிகம் ஆகும்.[1] இது 7 மிமீ (1⁄4 அங்குலம்) அளவுடைய சிண்ட்லேரியா பிரீவிபிங்குயிசு முதல் 5 மீ (15 அடி) நீளமுடைய மார்லின் வரையிலான முதுகெலும்புகளின் மிகவும் மாறுபட்ட அளவிலான மீன்களைக் கொண்ட வரிசையாகும். கிரெட்டேசியசின் பிற்காலத்தில் முதன் முதலாகத் தோன்றி பல்வேறு வகையில் பரவிக் காணபப்டுகின்றன. இந்த குழுவின் நன்கு அறியப்பட்ட மீன்களாக பெர்ச் மற்றும் ஈட்டி மீன் (பெர்சிடே), கொடுவா மற்றும் களவாய் மீன் (செர்ரானிடே) உள்ளன.[2]
பெர்சிபார்மிசு புதைப்படிவ காலம்:Late Cretaceous–recent | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | பெர்சிபார்மிசு |
மாதிரி இனம் | |
ஐரோப்பிய ஈட்டி மீன், பெர்கா புளுவியாடிலிசு லின்னேயசு, 1758 | |
துணைவரிசை | |
உரையில் |