பெலோபொன்னேசியன் கூட்டணி
பண்டைய கிரேக்க இராணுவ கூட்டணி / From Wikipedia, the free encyclopedia
பெலோபொன்னேசியன் கூட்டணி (Peloponnesian League) என்பது கிமு 6 முதல் 4 ஆம் நூற்றாண்டு வரை பண்டைய கிரேக்கத்தின் எசுபார்த்தாவின் ஆதிக்கத்தில் இருந்த பெலோபொன்னேச்சிய பிராந்தியத்தில் இருந்த ஒரு கூட்டணியாகும். ஏதென்சின் ஆதிக்கத்தில் இருந்த டெலியன் கூட்டணிக்கு எதிரான பெலோபொன்னேசியப் போரில் (கிமு 431-404) இரண்டு அணிகளில் ஒன்றாக இது முக்கியமாக அறியப்படுகிறது.