பெர்த்திராம் புரூக்
சரவாக் இராச்சியத்தில் துவான் மூடா சரவாக் எனும் இளவரசர் / From Wikipedia, the free encyclopedia
பெர்த்திராம் புரூக் அல்லது துவான் மூடா சரவாக் பெர்த்திராம் புரூக் (ஆங்கிலம்: Bertram Brooke அல்லது Captain Bertram Willes Dayrell Brooke; மலாய்: Tuan Muda Sarawak Kapten Bertram Willes Dayrell Brooke) (பிறப்பு: 8 ஆகஸ்டு 1876 – இறப்பு: 15 செப்டம்பர் 1965), என்பவர் சரவாக் மாநிலத்தில், வெள்ளை இராஜா எனும் புரூக் பரம்பரையில்; சரவாக் இராச்சியத்தில் துவான் மூடா சரவாக் எனும் இளவரசர்.[1]
விரைவான உண்மைகள் பெர்த்திராம் புரூக் Bertram Brooke, முடிசூட்டுதல் ...
பெர்த்திராம் புரூக் Bertram Brooke | |
---|---|
முடிசூட்டுதல் | துவான் மூடா சரவாக் Tuan Muda of Sarawak |
பிறப்பு | (1876-08-08)8 ஆகத்து 1876 |
இறப்பு | 15 செப்டம்பர் 1965(1965-09-15) (அகவை 89) |
வாழ்க்கைத் துணைகள் | கிளாடிஸ் மில்டன் பால்மர் (Gladys Milton Palmer) |
குழந்தைகளின் பெயர்கள் | 1. ஜீன் புரூக் Jean Brooke 2. எலிசபெத் புரூக் Elizabeth Brooke 3. அன்னே புரூக் Anne Brooke 4. அந்தோனி புரூக் Anthony Brooke |
மரபு | புரூக் வம்சாவழி |
அரசமரபு | வெள்ளை இராஜா |
தந்தை | சார்லசு புரூக் |
தாய் | மார்கரெட் புரூக் |
மதம் | கிறிஸ்துவம் |
மூடு
பெர்த்திராம் புரூக், வெள்ளை இராஜா புரூக் பரம்பரையில் இரண்டாவது இராஜாவான சார்லசு புரூக் (Charles Brooke) என்பவரின் இரண்டாவது மகனாவார். மூன்றாவது இராஜா சார்லசு வைனர் புரூக்கின் தம்பியாவார். சரவாக்கின் துவான் மூடா (Tuan Muda of Sarawak) பதவி வகித்தவர். தாயாரின் பெயர் இராணி மார்கரெட் ஆலிஸ் லிலி டி விண்ட் (Ranee Margaret Alice Lili de Windt).[2]