புரையழற்சி
From Wikipedia, the free encyclopedia
புரையழற்சி (Sinusitis) அல்லது சைனஸ் தொற்றுநோய் அல்லது நாசிப்புரையழற்சி (rhinosinusitis), என்பது நாசிப்பக்க வடிகுழல்களில் அழற்சியினால் ஏற்படும் அறிகுறிகளைக் குறிப்பிடுகிறது. பொதுவான அறிகுறிகளாகக் கெட்டியான மூக்குச்சளி, மூக்கடைப்பு, முகத்தில் வலி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்[1]. காய்ச்சல், தலைவலி, நாற்றம், தொண்டைக் கமறல், இருமல் போன்றவை பிற அறிகுறிகளாகும்[2][3]. இருமல் இரவு நேரங்களில் கடுமையானதாக இருக்கும். கடுமையான உடல்நலச் சிக்கல்கள் ஏற்படுவது அரிதான ஒன்றாகும்.[3] நான்கு வாரங்களுக்குக் குறைவான காலம் நீடித்தால் கடிய நாசிப்புரையழற்சி எனவும் [(acute rhinosinusitis (ARS)], பன்னிரெண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் நாட்பட்ட நாசிப்புரையழற்சி [chronic rhinosinusitis (CRS)] எனவும் அழைக்கப்படுகிறது[1].
விரைவான உண்மைகள் புரையழற்சி, வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...
புரையழற்சி | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | செவிநாசிமிடற்றியல் (Otorhinolaryngology) |
ஐ.சி.டி.-10 | J01., J32. |
ஐ.சி.டி.-9 | 461, 473 |
நோய்களின் தரவுத்தளம் | 12136 |
மெரிசின்பிளசு | 000647 |
ஈமெடிசின் | article/232670 |
பேசியண்ட் ஐ.இ | புரையழற்சி |
ம.பா.த | D012852 |
மூடு