புனித மரியா, கடலின் நட்சத்திரம்
From Wikipedia, the free encyclopedia
புனித மரியா, கடலின் நட்சத்திரம் என்ற பெயர் இயேசுவின் தாய் மரியாவுக்கு வழங்கப்படும் ஒரு பழமையான பெயராகும். கடலின் நட்சத்திரம் என்ற சொல் லத்தீன் மொழியில் Stella Maris என்ற சொல்லின் மொழிபெயர்ப்பாகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மரியாவுக்கான இந்த பட்டம் ஆரம்ப இடைக்கால காலத்தில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. மேரி என்ற பெயரின் சொற்பிறப்பியல், எழுத்து பிழையின் மூலமாக எழுந்ததாக கூறப்படுகிறது. மரியாவின் மூலமாக இயேசுவிடம் செல்வது மரியா வழிக்காட்டி நட்சத்திரம் என்ற பாத்திரத்தை உணர்த்துகிறது. இந்த பெயரின் கீழ் கன்னி மரியா இறைவனிடம் செல்ல ஒரு வழிகாட்டியாகவும், இறைவனிடம் நமக்கு பரிந்து பேசுபவராகவும் குறிப்பாக கடற்பயணம் மேற்கொள்பவர்களுக்கு பாதுகாவலியாகவும் நம்பப்படுகிறார். பல கடலோர தேவாலயங்கள் ஸ்டெல்லா மாரீஸ் அல்லது கடலின் நட்சத்திரம் என்ற பெயரை கொண்டுள்ளன.