புனித ஆரோக்கியநாதர்
From Wikipedia, the free encyclopedia
புனித ஆரோக்கியநாதர் அல்லது புனித ரோச் அல்லது புனித ராக் (அண். 1348 – 15/16 ஆகஸ்ட் 1376/79 (மரபுப்படி அண். 1295 – 16 ஆகஸ்ட் 1327[2]) என்பவர் ஒரு கிறித்தவப் புனிதர் ஆவார். இவரின் விழா நாள் 16 ஆகஸ்ட் ஆகும். ஆங்கிலத்தில் இவரை ராக் என்றும் கிளாஸ்கோ, இசுக்கொட்லாந்தில் ரோலோக்ஸ் என்றும் அழைப்பர்.[3] இவர் குறிப்பாக கறுப்புச் சாவுக்கு எதிராகப்பாதுகாவல் அளிப்பவராக நம்பப்படுகின்றார். மேலும் இவர் நாய்களுக்கும், தவறாகக்குற்றம் சாட்டப்பட்டோருக்கும் பாதுகாவலராவார்.
விரைவான உண்மைகள் புனித ஆரோக்கியநாதர், Pilgrim ...
புனித ஆரோக்கியநாதர் | |
---|---|
புனித ஆரோக்கியநாதர் | |
Pilgrim | |
பிறப்பு | c. 1348 அல்லது 1295 மொன்ட் பெலியர், மஜோர்க்கா பேரரசு |
இறப்பு | 15/16 ஆகஸ்ட் 1376/79 வொக்ஹெரா, சவோய் |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் |
புனிதர் பட்டம் | உரோமை புனிதர்கள் பட்டியலில் திருத்தந்தை பதினான்காம் கிரகோரியால் சேர்க்கப்பட்டது (1590–1591) |
முக்கிய திருத்தலங்கள் | புனித ஆரோக்கியநாதர் ஆலயம், வெனிசு, இத்தாலி |
திருவிழா | ஆகஸ்ட் 16, (பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையினரால்: ஆகஸ்ட் 17) |
சித்தரிக்கப்படும் வகை | தொடையில் காயத்தோடு, அப்பத்துண்டை கவ்விய நாயோடு |
பாதுகாவல் | போதேன்சா, இத்தாலி. மேலும் வாந்திபேதி, கொள்ளைநோய், மூட்டு வலி, பிளேக் நோய் தோல் நோய்களினால் பாதிக்கப்பட்டோர். மேலும் திருமணமாகாதோர், நய்கள், தவறாகக்குற்றம் சாட்டப்பட்டோர், அறுவை சிகிச்சைமருத்துவர்கள்,[1] சவக்குழி தோண்டுவோர், திருப்பயணியர்கள், மருந்தகர்கள் |
மூடு