பியட்ரல்சினாவின் பியோ
From Wikipedia, the free encyclopedia
பியட்ரல்சினா புனித பியோ (25 மே 1887 – 23 செப்டம்பர் 1968) கப்புச்சின் (Order of Friars Minor Capuchin) துறவற சபையின் குருவும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவரது திருமுழுக்கு பெயர் பிரான்செஸ்கோ ஃபோர்ஜியொன், கப்புச்சின் சபையில் இணைந்தபோது பியோ என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்; குருவானது முதல் பாத்ரே பியோ என்னும் பெயரில் பொதுவாக அறியப்படுகிறார். இவர் தனது உடலில் பெற்ற இயேசுவின் ஐந்து திருக்காயங்கள் இவரை உலகறியச் செய்தன. 2002 ஜூன் 16 அன்று, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.
விரைவான உண்மைகள் பியட்ரல்சினா நகரின் புனித பியோSaint Pio of Pietrelcina, குரு, துறவி, ஒப்புரவாளர், ஐந்துகாய வரம் பெற்ற முதல் குரு ...
பியட்ரல்சினா நகரின் புனித பியோ Saint Pio of Pietrelcina | |
---|---|
குரு, துறவி, ஒப்புரவாளர், ஐந்துகாய வரம் பெற்ற முதல் குரு | |
பிறப்பு | (1887-05-25)மே 25, 1887 பியட்ரல்சினா, இத்தாலி |
இறப்பு | செப்டம்பர் 23, 1968(1968-09-23) (அகவை 81) சான் ஜியோவானி ரொட்டொன்டோ |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்கம் |
அருளாளர் பட்டம் | மே 2, 1999, ரோம், இத்தாலி by திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் |
புனிதர் பட்டம் | ஜூன் 16, 2002, ரோம், இத்தாலி by திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் |
முக்கிய திருத்தலங்கள் | சான் ஜியோவானி ரொட்டொன்டோ |
திருவிழா | செப்டம்பர் 23 |
பாதுகாவல் | மக்கள் பாதுகாப்பு ஆர்வலர்கள், கத்தோலிக்க பதின்வயதினர் |
மூடு