பாரமுல்லா மாவட்டம்
சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதியில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பாரமுல்லா மாவட்டம் (Baramulla district), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் இம்மாவட்டம் காஷ்மீர் பகுதியில் உள்ள பதினொன்று மாவட்டங்களில் ஒன்றாகும். ஜீலம் ஆற்றாங்கரையில் அமைந்துள்ள பாரமுல்லா நகரம், 3,353 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் தலைமையிடமாகும். சிறந்த சுற்றுலா மற்றும் மலைவாழிடமான குல்மார்க் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் பாரமுல்லா மாவட்டம், நாடு ...
பாரமுல்லா மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லா மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | பாரமுல்லா |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,353 km2 (1,295 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 10,08,039 |
• அடர்த்தி | 305/km2 (790/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சல் சுட்டு எண் | 193122 |
வாகனப் பதிவு | JK05 |
இணையதளம் | http://baramulla.nic.in/ |
மூடு