பப்பேத்தே
From Wikipedia, the free encyclopedia
பப்பேத்தே (Papeete[2]) என்பது அமைதிப் பெருங்கடலில் அமைந்துள்ள பிரான்சின் கடல் கடந்த ஆட்புலமான பிரெஞ்சு பொலினீசியாவின் தலைநகரமாகும். பப்பேத்தே நகராட்சி (பிரான்சியக் கம்யூன்) வின்வர்டு தீவுகளில் பிரெஞ்சு பொலினீசியாவில் தாகித்தியில் அமைந்துள்ளது. இங்குதான் பிரான்சிய தலைமை ஆணையர் உள்ளார்.[3] தாகித்திய, பிரான்சியப் பொலினீசிய அரசு, தனியார் வணிக, தொழிலக,நிதியச் சேவை மையங்கள் அமைந்துள்ளன. பிரெஞ்சுப் பொலினீசியாவின் சுற்றுலாத்துறைக்கு இங்குள்ள துறைமுகம் நுழைவாயிலாக உள்ளது.[3] வின்வர்டு தீவுகளே சொசைட்டி தீவுகளின் அங்கமாகும். பப்பேத்தே என்பதற்கு தகித்திய மொழியில் "கூடையிலிருந்து நீர்" எனப் பொருள்படும்.[4]
விரைவான உண்மைகள் பப்பேத்தே, நாடு ...
பப்பேத்தே | |
---|---|
வின்வர்டு தீவிற்குள் குடியிருப்பின் அமைவிடம் (சிவப்பு வண்ணத்தில்) | |
நாடு | பிரான்சு |
வெளிநாட்டு Overseas collectivity | பிரெஞ்சு பொலினீசியா |
Subdivision | வின்வர்டு தீவுகள் (நிர்வாகத் தலைநகரம்) |
அரசு | |
• நகரமுதல்வர் (1995–நடப்பில்) | மிஷெல் புய்யார்டு |
Area 1[1] | 17.4 km2 (6.7 sq mi) |
• நகர்ப்புறம் | 299.5 km2 (115.6 sq mi) |
• நகர்ப்புறம் | 1,33,627 |
• நகர்ப்புற அடர்த்தி | 450/km2 (1,200/sq mi) |
• பெருநகர் | 25,769 |
INSEE/அஞ்சற்குறியீடு | 98735 /98714 |
ஏற்றம் | 0–621 m (0–2,037 அடி) |
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. |
மூடு
பப்பேத்தேயின் நகர்ப்புற மக்கள்தொகை ஆகத்து 2012 கணக்கெடுப்பின்படி 133,627 ஆகும். இவர்களில் கருவ பப்பேத்தே நகரத்தில் 25,769 மக்கள் உள்ளனர்.[5]