பண்டைய தமாசுக்கசு நகரம்
From Wikipedia, the free encyclopedia
பண்டைய தமாசுக்கசு நகரம் (Ancient City of Damascus) சிரியா நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பண்டைய நகரம் ஆகும். உலகில் மக்கள் தொடர்ந்து வாழும் நகரங்களில் ஒன்றான தமாசுக்கசு நகரத்தில், கிமு 3200 முதல் மக்கள் தொடர்ந்து வாழ்கின்றனர். [1] இப்பண்டைய தமாசுக்கசு நகரத்தில், கிறித்தவ தேவாலயங்கள் மற்றும் இசுலாமியர்களின் மசூதிகள் உள்ளிட்ட, பல தொல்லியல் களங்களைக் கொண்டுள்ளது. பண்டைய தமாசுக்கசு நகரத்தில் கிரேக்கர்கள், உரோமர்கள், பைசாந்தியர்கள் மற்றும் உதுமானியப் பேரரசசினர் தங்களின் பண்பாட்டுக் களங்களை நிறுவியுள்ளனர்.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
---|---|
பண்டைய டமாஸ்கஸ் நகரத்தின் நுழைவாயில் | |
அமைவிடம் | டமாஸ்கஸ், சிரியா |
உள்ளடக்கம் |
|
கட்டளை விதி | பண்பாட்டுக் களம்: (i), (ii), (iii), (iv), (vi) |
உசாத்துணை | 20bis |
பதிவு | 1979 (3-ஆம் அமர்வு) |
விரிவுகள் | 2011 |
அழியும்நிலை | 2013– |
பரப்பளவு | 86.12 ha (0.3325 sq mi) |
Buffer zone | 42.60 ha (0.1645 sq mi) |
ஆள்கூறுகள் | 33°30′41″N 36°18′23″E |
சிரியாவில் பண்டைய டமாஸ்கஸ் நகரத்தின் அமைவிடம் |
ரோமானியர்கள் சிரியாவை ஆட்சி செய்த போது, பண்டைய வரலாற்றுக் கால தமாசுக்கசு நகரத்தைச் சுற்றி கட்டிய கோட்டைச் சுவர்களை, 1979ல் யுனெசுகோவால் உலகப் பாரம்பரியக் களாக அறிவிக்கப்பட்டது.
2011 முதல் நடைபெறும் சிரிய உள்நாட்டுப் போர் காரணமாக, சிரியாவின் அனைத்து உலகப் பாரம்பரியக் களங்களும், அழியும் நிலையில் உள்ளதாக, சூன், 2013ல் யுனெசுகோ நிறுவனம் அறிவித்துள்ளது.[2]