பட்டயம்
From Wikipedia, the free encyclopedia
பட்டயம் (ஆங்கிலம்: Diploma) என்பது கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்களில் குறிப்பிட்ட துறையில் கற்றுத் தேர்ச்சி பெற்றதற்கு வழங்கப்படும் சான்றிதழாகும். இந்தப் பட்டயமானது உயர் கல்வி, இளநிலைப் படிப்பு, முதுநிலைப் படிப்பு போன்ற வெவ்வேறு படிப்புகளுக்கும் வழங்கப்படுகிறது. வரலாற்றுப்படி டிப்ளமா என்ற பட்டயம் என்பது ஒரு அலுவல் ஆவணத்தைக் குறிக்கிறது.[1] டிப்ளமெடிக், டிப்ளமெட், டிப்ளமெசி போன்ற சொற்கள் இதன் இனச்சொற்களே.[2][3][4]
இலத்தீன் மொழியில் டிப்ளமா என்ற சொல்லானது சான்றளித்தல் அல்லது சான்றுகூறுதல் என்ற பொருளில் வருவதால் ஒரு தேர்ச்சியடைதல் என்பதற்குச் சான்றாக அளிக்கப்பட்ட ஆவணத்தை டிப்ளமா என்று அழைக்கும் வழக்கம் வந்தது.[5] பட்டப்படிப்பிற்கான சான்றிதழாகவும் இந்த ஆவணம் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குறிக்கிறது.[6][7][8][9] நோபல் பரிசு பெற்றொருக்கு வழங்கப்படும் சான்றிதழையும் பட்டயம் என்றே அழைக்கின்றனர். வரலாற்று மூலங்களின்படி மன்னர் தானமாகவோ குத்தகைக்கு வழங்கிய நிலப்பட்டாவை பட்டயம் என்றே குறிக்கப்படுகிறது.