நோர்வே
வட ஐரோப்பாவின் அரசியலமைப்பு முடியாட்சி நாடு / From Wikipedia, the free encyclopedia
நோர்வே அல்லது நார்வே (ஆங்கிலம்: Norway /ˈnɔɹweɪ/ (உதவி·விவரம்); நோர்வே மொழிகளில்: பூக்மோல் மொழியில் Norge, நீநொர்சிகு மொழியில் Noreg, சாமி மொழியில் Norga) ஐரோப்பாவில் எசுக்காண்டினாவியா தீபகற்பத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள நாடாகும். இது அதிகாரபூர்வமாக நோர்வே இராச்சியம் என அழைக்கப்படுகிறது. இந்நாடு வடக்கே ஆர்க்டிக் பெருங்கடல், மேற்கே நோர்வே கடல், தெற்கே வட கடல் என்பவற்றையும், சுவீடன், பின்லாந்து, இரசியா என்பவற்றுடன் நில எல்லைகளையும் கொண்டுள்ளது. நோர்வே அகலம் குறைந்த நீளமான வடிவத்தையுடைய நாடாகும். நோர்வேயின் நீளமான கரையோரப் பகுதிகள் வட அட்லாண்டிக் பெருங்கடலை நோக்கியதாய் இருப்பதுடன், புகழ்பெற்ற கடல்நீரேரிகளையும் கொண்டுள்ளது.
நோர்வே இராச்சியம் பிற அதிகாரப்பூர்வ பெயர்கள்
| |
---|---|
குறிக்கோள்: Alt for Norge எல்லாம் நோர்வேக்கு | |
நாட்டுப்பண்: Ja, vi elsker dette landet
“ஆம், நாங்கள் இந்த நாட்டை நேசிக்கிறோம்” | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | ஒசுலோ 59°56′N 10°41′E |
ஆட்சி மொழி(கள்) | நோர்வே மொழி¹ (பூக்மோல் மற்றும் நீநொர்சிகு) |
தேசிய மொழிகள் | |
இனக் குழுகள் |
|
அரசாங்கம் | அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி |
• மன்னர் | எரல்ட் V |
• பிரதமர் | யோனாசு கார் இசுட்டோரி |
அரசியலமைப்பு | |
• விடுதலை | சுவீடன் உடனான ஒன்றியத்தில் இருந்து |
• பிரகடனம் | யூன் 7 1905 |
• அங்கீகாரம் | அக்டோபர் 26 1905 |
பரப்பு | |
• மொத்தம் | 385,207[3] km2 (148,729 sq mi) (61வது3) |
• நீர் (%) | 5.7% |
மக்கள் தொகை | |
• சனவரி 2024 மதிப்பிடு | 5,550,203[4] (120வது) |
• 2001 கணக்கெடுப்பு | 4,520,947 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $195.13 பில்லியன் (42வது) |
• தலைவிகிதம் | $42,364 (2வது) |
மமேசு (2022[5]) | 0.966 அதியுயர் · 2வது |
நாணயம் | நோர்வே குரோன் (NOK) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (மத்திய ஐரோப்பிய நேரம்) |
ஒ.அ.நே+2 (மத்திய ஐரோப்பிய கோடை நேரம்) | |
அழைப்புக்குறி | 47 |
இணையக் குறி | .no ² |
1நோர்வே மொழி, பூக்மோல் (Bokmål), மற்றும் நீநொர்சிகு (Nynorsk) மொழிகள் ஆட்சி மொழிகளாகும். மேலும் 6 நகரங்களில் சாமி (Sami) மொழியும் ஒரு நகரத்தில் பின்லாந்து மொழியும் இணை-ஆட்சி மொழிகளாகும்.
2 இரண்டு மேலதிக இணைய குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளப்போதும் பாவனையில் இல்லை:.sj-சுவால்பார்ட் மற்றும் யான் மாயன்; .bv-- பூவெட் தீவு(தென் அத்திலாந்திக்குப் பெருங்கடல்) 3பரப்பளவு நிலை சுவால்பாத் மற்றும் சான் மயேன் என்பற்றை உள்ளடக்கியதாகும் |
நாட்டின் வடமேற்குப் பகுதியிலுள்ள யான் மாயென் தீவானது, நோர்வேயின் பிரதான நிலப்பரப்பின் ஒரு பகுதியாக கருதப்படுவதுடன், ஐசுலாந்து கடலை நோக்கி அமைந்த எல்லையைக் கொண்டுள்ளது. மேலும் சுவால்பார்ட் எனப்படும் தீவுக் கூட்டமானது யான் மாயன் போலவே, நோர்வே இராச்சியத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டாலும், சுவால்பார்ட் உடன்படிக்கையின் எல்லைக்குட்பட்டு, நோர்வேயின் அரசுரிமைக்கு கீழ் இயங்குகின்றது.இங்கே சுரங்கத் தொழில் செய்யும் இரசிய மக்களும் வசிக்கின்றனர்.