நாமிச்சே பசார்
From Wikipedia, the free encyclopedia
நாமிச்சே பசார் (Namche Bazaar, Nemche Bazaar அல்லது Namche Baza; நேபாளி: नाम्चे बजारகேட்கⓘ) என்பது நேபாளத்தின் வடகிழக்கே உள்ள மாநில எண் 11இல் உள்ள சோலுகும்பு மாவட்டத்தில் அமைந்த ஒரு எவரஸ்ட் மலை அடிவார சிற்றூர் ஆகும். இவ்வூரின் மிகத்தாழ்ந்த பகுதியே கடல்மட்டத்திலிருந்து 3440 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. நேபாள நாட்டிலேயே மிகவும் விலைமிக்க செலவுமிக்க இடம் இதுவாகும். நேபாளத்தின் தலைநகரான காட்டுமாண்டு நகரத்தைவிட மூன்று மடங்கு கூடுதல் செலவுமிக்க இடம் இது. இங்கே நேபாள அரசின் அதிகாரிகளும், அலுவலகங்களும், தடுப்புக்காவல் நிலையங்களும் உள்ளன.
நாமிச்சே பசார்
नाम्चे बजार | |
---|---|
மலையடிவாரம் | |
நேபாள மாநில எண் 1, சோலுகும்பு மாவட்டத்தில் நாம்சி பஜாரின் அமைவிடம் Show map of Province No. 1 | |
ஆள்கூறுகள்: 27°49′N 86°43′E | |
நாடு | நேபாளம் |
மாநிலம் | மாநில எண் 1 |
மாவட்டம் | சோலுகும்பு |
கிராமிய நகராட்சி மன்றம் | கும்பு பசங்கல்ஹமு |
ஏற்றம் | 3,440 m (11,290 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 1,647 |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 56002 |
Area code | 038 |
2011 ஆண்டின் கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள் தொகை 1647, இவர்கள் 397 தனி வீடுகளில் வாழ்கின்றார்கள்.[1] இங்கு வாழும் செர்ப்பா இனத்தவர் எவரஸ்டு சிகரம் ஏறும் வீரர்களுக்கு வழிகாட்டிகளாகவும், சுமை தூக்குபவர்களாகவும் பணிசெய்கின்றனர்.[2] இவ்வூரில் யாக் எருமை மாமிசம் அதிக அளவில் உண்ணப்படுகிறது.