நருமதை
From Wikipedia, the free encyclopedia
நருமதை ஆறு அல்லது நர்மதா ஆறு (Narmada River) இந்திய துணைக்கண்டத்து ஆறுகளில் ஒன்றாகும். இது ஏறத்தாழ 1290 கி.மீ நீளமானது. மைகான் மலைத்தொடரில் அமர்கண்ட் சிகரத்தில் தோன்றி விந்திய சாத்பூரா மலைகளுக்கிடையில் பாய்ந்து நர்மதா மாவட்டம் வழியாக அரபிக் கடலிலுள்ள கம்பாத் வளைகுடாவில் கலக்கின்றது. குசராத்துக்கும் மத்திய பிரதேசத்திற்கும் உயிர் நாடியாக விளங்குகிறது. மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளில் இது பெரியது ஆகும். மற்றொரு பெரிய ஆறு தபதி ஆகும். கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளை அடுத்து நருமதை ஆறே இந்தியாவின் மிக நீளமான நதிகளுள் மூன்றாவது இடத்தைப்பெறுகிறது. வட இந்தியாவையும் தென் இந்தியாவையும் பிரிக்கும் மரபுவழி எல்லையாக இது உள்ளது.
இரண்டு நில அடுக்குகள் மோதுவதால் உருவாகும் நிலபிளவு வழியாக பாயும் ஆறுகளில் இது ஒன்று.
விரைவான உண்மைகள் நர்மதா, அமைவு ...
நர்மதா | |
---|---|
இந்தியாவின் ஜபல்பூரில் உள்ள காட்டில் ஓடும் ஆறு | |
நர்மதா ஆற்றில் கலக்கும் துணை நதிகள் மற்றும் அதன் வடிகால் பகுதியின் தோராயமான அளவைக் காட்டும் வரைபடம் | |
அமைவு | |
Country | இந்தியா |
State | மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், குசராத்து |
City | ஜபல்பூர், டிண்டோரி, நர்சிங்பூர் (Harda), (Mandhata), பர்வானி, சிவபுரி, (Barwaha), மஹேஷ்வர், மண்ட்லா, பரூச், ராஜ்பிப்லா, (Dharampuri) |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | அமர்கந்தாக் |
⁃ அமைவு | அமர்கந்தாக் பீடபூமி , அனூப்பூர் மாவட்டம், மத்திய இந்தியா, மத்தியப் பிரதேசம் |
⁃ ஆள்கூறுகள் | 22°40′0″N 81°45′0″E |
⁃ ஏற்றம் | 1,048 m (3,438 அடி) |
முகத்துவாரம் | கம்பாத் வளைகுடா (அரபிக்கடல்) |
⁃ அமைவு | பரூச் மாவட்டம், குசராத்து |
⁃ ஆள்கூறுகள் | 21°39′3.77″N 72°48′42.8″E |
⁃ உயர ஏற்றம் | 0 m (0 அடி) |
நீளம் | 1,312 km (815 mi)approx. |
வெளியேற்றம் | |
⁃ சராசரி | 1,447 m3/s (51,100 cu ft/s) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | Garudeshwar[1] |
⁃ சராசரி | 1,216 m3/s (42,900 cu ft/s) |
⁃ குறைந்தபட்சம் | 10 m3/s (350 cu ft/s) |
⁃ அதிகபட்சம் | 11,246 m3/s (397,100 cu ft/s) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | Burhner River, Banjar River, Sher River, Shakkar River, Dudhi River, Tawa River, Ganjal River, Chhota Tawa River, காவிரி ஆறு, Kundi River, Goi River, Karjan River |
⁃ வலது | Hiran River, Tendoni River, Choral River, கோலர் ஆறு, Man River, Uri River, Hatni River, Orsang River |
மூடு