தோபா பத்தாக் மக்கள்
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவைச் சேர்ந்த இனக்குழு / From Wikipedia, the free encyclopedia
தோபா பத்தாக் மக்கள் (இந்தோனேசியம்: Suku Batak Toba அல்லது Halak Batak Toba; ஆங்கிலம்: Toba People அல்லது Toba Batak People) என்பவர்கள் இந்தோனேசியா வடக்கு சுமத்ராவில் வாழும் மிகப்பெரிய பழங்குடி மக்கள் ஆகும். பத்தாக் எனும் சொற்றொடர் பொதுவாக தோபா பத்தாக் மக்களைக் குறிக்கிறது.
தோபா பத்தாக் ஆணும் பெண்ணும் பாரம்பரிய உடைகளை அணிந்துள்ளனர் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
+ 4,100,000 (2020) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இந்தோனேசியா: வடக்குச் சுமாத்திரா = 3,000,000 வடக்கு சுமத்ராவிற்கு வெளியே: ரியாவு, பத்தாம், ஜகார்த்தா, சாவகம், கலிமந்தான், சுலாவெசி, பாலி,மற்றும் இந்தோனேசியாவைச் சுற்றி = 1,100,000 [1] இந்தோனேசியாவிற்கு வெளியே:
| |
மொழி(கள்) | |
தோபா படாக் மொழி, இந்தோனேசிய மொழி | |
சமயங்கள் | |
[கிறிஸ்தவம்] 97.8%, சுன்னி இசுலாம் 2%, மற்ற 0.2% [2][3] | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
பத்தாக் மக்கள் |
தோபா சமோசிர் பிராந்தியம் (Toba Samosir Regency), உம்பாங் உசுந்துதான் பிராந்தியம் (Humbang Hasundutan Regency), சமோசிர் பிராந்தியம் (Samosir Regency), வடக்கு தபனுலி பிராந்தியம் (North Tapanuli Regency), டைரி பிராந்தியத்தின் (Dairi Regency) ஒரு பகுதி, மத்திய தபனுலி பிராந்தியம் (Central Tapanuli Regency), சிபோல்கா (Sibolga) மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தோபா மக்கள்; காணப் படுகின்றனர். பத்தாக் தோபா மக்கள் சமோசிரில் பொதுவான பாரம்பரிய படக் கட்டடக்கலை பாணியில் கட்டடங்களை உருவாக்குகிறார்கள்.