தொராண்டோ
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத் தலைநகர் / From Wikipedia, the free encyclopedia
தொராண்டோ (ஆங்கிலம்: Toronto; இலங்கை வழக்கம்:ரொறன்ரோ, தமிழக வழக்கம்: டொராண்டோ) கனடாவில் மக்கள் திரளாக வாழும் புகழ் பெற்ற ஒரு நகரம். இது கனடாவின் பொருளியல், வணிக, பண்பாட்டு, கல்வி மையமாகும். இதுவே கனடாவின் மிகப் பெரிய நகரமும், ஒன்ரோறியோ மாகாணத்தின் (மாநிலத்தின்) தலைநகரமும் ஆகும். இந்நகரம் தென் ஒன்ரோறியாவில் (ஒன்ட்டாரியோவில்), ஒன்ரோறியா ஆற்றங்கரையில், ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது.
தொராண்டோ | |
---|---|
நகரம் | |
தொராண்டோ நகரம் | |
குறிக்கோளுரை: பன்முகத்தன்மை நமது பலம்[1][2][3] | |
ஆள்கூறுகள்: 43°44′30″N 79°22′24″W | |
நாடு | கனடா |
மாகாணம் | ஒன்றாரியோ |
குடியேற்றம் | 1750; 274 ஆண்டுகளுக்கு முன்னர் (1750)[4] |
அமைப்பு | ஆகத்து 27, 1793; 230 ஆண்டுகள் முன்னர் (1793-08-27) (யோர்க்) |
இணைப்பு | மார்ச்சு 6, 1834; 190 ஆண்டுகள் முன்னர் (1834-03-06) (தொராண்டோ) |
பிரிவாக இணைப்பு | சனவரி 20, 1953; 71 ஆண்டுகள் முன்னர் (1953-01-20) (தொராண்டோ பெருநகரம்) |
ஒருங்கிணைப்பு | சனவரி 1, 1998; 26 ஆண்டுகள் முன்னர் (1998-01-01) (தொராண்டோ நகரம்) |
மாவட்டங்கள் |
|
அரசு | |
• வகை | ஒற்றை அடுக்கு நகராட்சி (முதல்வர்-பேரவை அமைப்பு) |
• நகர முதல்வர் | யோன் டோரி |
• ஆட்சி | தொராண்டோ நகரசபை |
• நடுவண் பிரதிநிதித்துவம் | நாடாளுமன்ற உறுப்பினர்
|
பரப்பளவு | |
• நகரம் | 630.20 km2 (243.32 sq mi) |
• நகர்ப்புறம் | 1,792.99 km2 (692.28 sq mi) |
• மாநகரம் | 5,905.71 km2 (2,280.21 sq mi) |
ஏற்றம் | 76.5 m (251.0 ft) |
மக்கள்தொகை (2021)[8] | |
• நகரம் | 27,94,356 (1-வது) |
• அடர்த்தி | 4,427.8/km2 (11,468/sq mi) |
• மெட்ரோ | 62,02,225 (1-வது) |
• பிராந்தியம் | 97,65,188 |
இனம் | தொராண்டோனியர் |
நேர வலயம் | ஒசநே−5 (கிநேவ) |
• கோடை (பசேநே) | ஒசநே−4 (கிநேவ) |
அஞ்சல் குறியீடு | M |
Area codes | 416, 647, 437 |
முக்கிய வானூர்தி நிலையங்கள் | தொராண்டோ பியர்சன் பன்னாட்டு வானூர்தி நிலையம், பில்லி பிசொப் தொராண்டோ நகர வானூர்தி நிலையம் |
நெடுஞ்சாலைகள் | 2A, 27, 400, 401, 404, 409, 427, பிளாக் கிரீக் சாலை, அலென் சாலை, டொன் வெலி பார்க்வே, கார்டினர் விரைவுநெடுஞ்சாலை, இராணி எலிசபெத் சாலை |
விரைவுப் போக்குவரத்து | தொராண்டோ சப்வே |
பயணிகள் தொடருந்து | கோ திரான்சிட் |
GDP (தொராண்டோ ம.க.பெ) | CA$385.1 பில்லியன் (2016)[9] |
தனிநபர் மொ.உ.உ (தொராண்டோ ம.க.பெ) | CA$57,004 (2016) |
இணையதளம் | toronto |
கனடாவின் 2004 ஆம் ஆண்டுப் புள்ளிவிபரங்களின் படி, இங்கே 5,203,686 மக்கள் வாழ்கின்றனர். இம் மக்கள் பன்னாடுகளில் இருந்து வந்த பல இன, மொழி, சமயத்தைச் சேர்ந்தவர்கள். உலகிலேயே வேறு எங்கும் இல்லாத் அளவிற்கு பல்வகை இன, மொழி, சமய, தேசிய வேறுபாடுகளை கொண்ட மக்கள் அமைதியாக, திறந்த மன பண்போடு, ஒற்றுமையாக செழிப்புடன் வாழ்வது இங்கே தான். இவ் வகையில் தொராண்டோ உலகின் மிகச் சிறந்த நகரங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது.