தொடக்கப் பள்ளி
ஐந்து வயது முதல் பன்னிரண்டு வயது வரையிலான குழந்தைகள் ஆரம்ப அல்லது தொடக்கக் கல்வியைப் பெறும் ப / From Wikipedia, the free encyclopedia
தொடக்கப்பள்ளி அல்லது ஆரம்பப் பள்ளி (primary school) என்பது 2.5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்கான பள்ளியாகும் . ஆரம்பப் பள்ளிக் கல்வியானது மழலைக் கலவிக்கு பிந்தையதும் மேல்நிலைப் பள்ளிக்கு முந்தையதுமாகும். அயர்லாந்து, இந்தியா, இலண்டன், [1] ஆத்திரேலியா, [2] நியூசிலாந்து, [3] திரினிடாட் மற்றும் டொபாகோ, ஜமைக்கா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இது ஆரம்பப் பள்ளி என்றும் வட அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்சில் தரப் பள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.
கல்வியின் சர்வதேச தர வகைப்பாடானது ஆரம்பக்கல்வியானது வாசிப்பு, எழுதுதல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் அடிப்படைத் திறன்களை வழங்குவதற்கும் கற்றலுக்கான உறுதியான அடித்தளத்தை நிறுவுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறது. இது ISCED நிலை 1 : ஆரம்பக் கல்வி அல்லது அடிப்படைக் கல்வியின் முதல் நிலையாகும். [4]