திரே தாவா
From Wikipedia, the free encyclopedia
திரே தாவா (Dire Dawa) (அம்காரியம்: ድሬዳዋ?, கிழக்கு ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியாவின் ஒரோம்யா பிரதேப் பகுதியில் அமைந்த தன்னாட்சி கொண்ட நகர மாகாணம் ஆகும். 1993-ஆம் ஆண்டு வரை திரே தாவா நகரம் ஒரோம்யா பிரதேசத்தின் பகுதியாக இருந்தது.[6]திரே தாவா நகரம் இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 2004-ஆம் ஆண்டில் திரே தாவா நகரம் தன்னாட்சியுடன் கூடிய பட்டய நகரப் பகுதியாக மாறியது. [7]
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
விரைவான உண்மைகள் திரே தாவா, நாடு ...
திரே தாவா | |
---|---|
நகர மாகாணம் மற்றும் பட்டய நகரம் | |
ஆள்கூறுகள்: 9°36′N 41°52′E | |
நாடு | எத்தியோப்பியா |
பிரதேசம் | திரே தாவா |
மண்டலம் | திரே தாவார் |
நகரம் | திரே தாவா |
நிறுவியது | 24 டிசம்பர் 1902 |
அரசு | |
• வகை | பட்டய நகரம் |
• மேயர் | கதிர் ஜுவார் [1] |
பரப்பளவு | |
• நகர மாகாணம் மற்றும் பட்டய நகரம் | 1,213 km2 (468 sq mi) |
ஏற்றம் | 1,276[2] m (4,189 ft) |
மக்கள்தொகை (சூலை 2019) | |
• நகர மாகாணம் மற்றும் பட்டய நகரம் | 4,93,000[3] |
• நகர்ப்புறம் | 2,77,000[4] |
நேர வலயம் | ஒசநே+3 (EAT) |
Area code | (+251) 25 |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2019) | 0.570[5] medium • 3rd of 11 |
இணையதளம் | www.dire-dawa.gov.et |
மூடு
திரே தாவா நகரம் 9°36′N 41°52′E பாகையில் அமைந்துள்ளது. இது ஒரு தொழில் மற்றும் வணிக நகரம் ஆகும். இங்கு திரே தாவா வானூர்தி நிலையம் உள்ளது. இது எத்தியோப்பியாவின் 7-வது பெரிய நகரம் ஆகும். 1 சூலை 2015 அன்று இந்நகரத்தின் மக்கள் தொகை 2,77,000 ஆகும்.