தியோத்திவாக்கன்
புராதன மெக்சிகன் நகரம் / From Wikipedia, the free encyclopedia
தியோத்திவாக்கன் (Teotihuacan);[1] எசுப்பானியம்: Teotihuacán, (எசுப்பானிய ஒலிப்பு: [teotiwa'kan] ( கேட்க); ஒலிப்புⓘ) நடு அமெரிக்காவின் தற்கால மெக்சிக்கோ நாட்டின் மெக்சிக்கோ மாநிலத்தில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். கிபி 500க்கு முந்தைய இப்பண்டைய நகரம் நவீன கால மெக்சிக்கோ நகரத்திற்கு வடகிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தியோத்திவாக்கன் Teotihuacan | |
---|---|
இறந்தோரின் நிழற்சாலை மற்றும் சந்திரப் பிரமிடு | |
இருப்பிடம் | தியோத்திவாக்கன் நகராட்சி, மெக்சிக்கோ மாநிலம், மெக்சிக்கோ |
ஆயத்தொலைகள் | 19°41′33″N 98°50′38″W |
வரலாறு | |
காலம் | முந்தைய பாரம்பரியக் காலம் முதல் பிந்தைய பாரம்பரியக் காலம் |
பகுதிக் குறிப்புகள் | |
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம் | |
அலுவல்முறைப் பெயர் | எசுப்பானியக் காலத்திற்கு முந்தைய தியோத்திவாக்கன் நகரம் |
கட்டளை விதி | பண்பாடு: i, ii, iii, iv, vi |
உசாத்துணை | 414 |
பதிவு | 1987 (11-ஆம் அமர்வு) |
பரப்பளவு | 3,381.71 ஹெக்டேர் |
கொலம்பசின் காலத்திற்கு முந்தைய தியோத்திவாக்கன் நகரத்தின் ஞாயிற்றுப் பிரமிடு மற்றும் சந்திரப் பிரமிடுகளால் பெரிதும் அறியப்படுகிறது. பண்டைய தியோத்திவாக்கன் நகரத்தின் மக்கள் தொகை 1,25,000 அல்லது அதற்கு மேற்பட்டதாக அறியப்படுகிறது.[2][3] making it at least the sixth-largest city in the world during its epoch.[4] 8 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டிருந்த பண்டைய தியோத்திவாக்கன் நகரத்தில் மெக்சிக்கோ சமவெளியின் 80 முதல் 90% மக்கள் வாழ்ந்தனர். இந்நகரம் 1987-இல் யுனெஸ்கோ உலகப்பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.[5][6]