திமிஷ்கு
From Wikipedia, the free encyclopedia
தமசுகசு அல்லது திமிஷ்கு (ஆங்கில மொழி: Damascus, அரபு மொழி: دمشق Dimashq) என்பது சிரியாவின் தலைநகரம் ஆகும். இது சிரியாவில் அலெப்போவிற்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். பொதுவாக, இது சிரியாவில் அஷ்-ஷாம் (ஆங்கில மொழி: ash-Sham, அரபு மொழி: الشام ash-Shām) என அழைக்கப்படுகிறது. இந்நகரம் சிட்டி ஆப் ஜாஸ்மின் (ஆங்கில மொழி: City Of Jasmineஅரபு மொழி: مدينة الياسمين Madīnat al-Yāsmīn) என்ற புனைப்பெயராலும் அழைக்கப்படுகிறது. இது உலகில் பழமைவாய்ந்த குடியேற்ற நகரங்களுள் ஒன்றாக விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.[3] தமசுகசு, லெவண்ட்டின் பிரதான சமய மற்றும் கலாச்சார மையமாகும். 2009ன் மக்கள்தொகையின் படி இதன் மக்கள் தொகை 1,711,000 எனக் கணிக்கப்பட்டுள்ளது.[2]
தமஸ்கு
ஆங்கில மொழி: Damascus, دمشق | |
---|---|
அடைபெயர்(கள்): சிட்டி ஆப் ஜாஸ்மின் | |
நாடு | சிரியா |
பிரதேசம் | தமசுகசு, தலைநகரம் |
அரசு | |
• ஆளுநர் | பிஷர் அல் சப்பான் (Bishr Al Sabban) |
பரப்பளவு | |
• நகரம் | 105 km2 (41 sq mi) |
• நகர்ப்புறம் | 77 km2 (30 sq mi) |
ஏற்றம் | 680 m (2,230 ft) |
மக்கள்தொகை (2009 est.)[2] | |
• நகரம் | 17,11,000 |
இனம் | Damascene |
நேர வலயம் | ஒசநே+2 (EET) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்) |
Area code(s) | நாட்டுக் குறியீடு: 963, நகரக்குறியீடு: 11தொலைபேசி குறியீடு |
இணையதளம் | www |
அலுவல் பெயர் | தமசுகசுவின் பழங்கால நகரம் |
வகை | கலாச்சார |
வரன்முறை | i, ii, iii, iv, vi |
தெரியப்பட்டது | 1979 (3rd session) |
உசாவு எண் | 20 |
மாநிலக் கட்சி | சிரியா |
பிரதேசம் | அராப் மாநிலம் |
2.6 மில்லியன் (2004) மக்களைக்கொண்டு தென்மேற்கு சிரியாவின் பெருநகரப் பகுதியின் மையத்தில் தமசுகசு அமைந்துள்ளது.[4] மழை நிழல் விளைவின் காரணாமாக தமசுகசு வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. புவியியல் ரீதியாக தமசுகசு அண்டி-லெபனான் மலையின் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. நடுநிலக்கடலுக்கு 80 கிலோமீட்டர்கள் (50 mi) கிழக்குக் கரையாக, 680 மீட்டர்கள் (2,230 அடி) கடற்பரப்பிற்கு மேலாக உள்ள ஒரு பீடபூமியில் இது அமைந்துள்ளது. பாரதா ஆறு தமசுகசுக்கு இடையில் ஓடுகிறது.
கி.மு இரண்டாவது மில்லேனியத்தில் இங்கு முதல் குடியேற்றம் அமைக்கப்பட்டது. அப்போது 661 தொடக்கம் 750வரை உமையா கலீபகத்தின் தலைநகரமாக இது தெரிவு செய்யப்பட்டிருந்தது. அப்பாசியக் கலீபகத்தின் வெற்றியின் பின்னர் இசுலாம் பக்தாத்திற்கு நகர்ந்தது.