தாவீதின் கல்லறை
From Wikipedia, the free encyclopedia
தாவீது அரசர் கல்லறை அல்லது தாவீதின் கல்லறை (King David's Tomb; எபிரேயம்: קבר דוד המלך) என்பது 12 ஆம் நூற்றாண்டில் உருவான பாரம்பரியத்தின்படி இசுரயேல் அரசரான தாவீது அரசர் அடக்கம் செய்யப்பட்ட இடமாகும். இது எருசலேமின் சீயோன் மலையில் அமைந்துள்ளது. இக்கல்லறை முன்னாள் பைசாந்திய தேவாலயமான "ககியா சியோன்" அமைந்திருந்த மூலைப் பகுதியி உள்ள கீழ்த்தளத்தில் அமைந்துள்ளது. பழைய பைசாந்திய பாரம்பரியம் 4 ஆம் நூற்றாண்டு காலத்துக்குரியதும், கிறித்தவ விசுவாசத்தின் மூல சந்திப்பு இடமாக "இயேசுவின் மேல் அறை" என அடையாளங் காணப்பட்டது. இக்கட்டடம் தற்போது "புலம்பெயர் யெசிவா"வின் பகுதியாகவுள்ளது.
விரைவான உண்மைகள் தாவீது அரசர் கல்லறை எபிரேயம்: קבר דוד המלך, மாற்றுப் பெயர் ...
தாவீது அரசர் கல்லறை எபிரேயம்: קבר דוד המלך | |
---|---|
மாற்றுப் பெயர் | தாவீதின் கல்லறை |
இருப்பிடம் | எருசலேம் |
பகுதி | இசுரேல் |
ஆயத்தொலைகள் | 31.77170°N 35.22936°E / 31.77170; 35.22936 |
வகை | கல்லறை |
வரலாறு | |
கலாச்சாரம் | அயூபிட், எபிரேயம், பைசாந்தியம், சிலுவைப் போர்கள் |
மூடு