தாய்லாந்து மாநிலங்கள்
தாய்லாந்து நாட்டில் உள்ள அரசாங்க நிர்வாக நிலப்பகுதிகள் / From Wikipedia, the free encyclopedia
தாய்லாந்து மாநிலங்கள் (ஆங்கிலம்: Provinces of Thailand; தாய்: จังหวัดของประเทศไทย); என்பது தாய்லாந்து நாட்டில் உள்ள அரசாங்க நிர்வாக நிலப்பகுதிகள் ஆகும். அந்த அமைப்பில் தாய்லாந்தில் உள்ள 76 மாநிலங்களும் (தாய்: จังหวัด; ஆங்கிலம்: Changwat); புரோவின்சுகள் (Provinces) எனப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகின்றன.[3]
விரைவான உண்மைகள் தாய்லாந்து மாநிலங்கள்Provinces of Thailand จังหวัดของประเทศไทย, வகை ...
தாய்லாந்து மாநிலங்கள் Provinces of Thailand จังหวัดของประเทศไทย | |
---|---|
தாய்லாந்தில் சிறப்பு நிர்வாகப் பகுதியாக விளங்கும் பாங்காக் மாநகர்க் காட்சிகள் | |
வகை | ஒருமுக அரசு |
அமைவிடம் | தாய்லாந்து இராச்சியம் |
எண்ணிக்கை | 76 மாநிலங்கள் 1 சிறப்பு நிர்வாகப் பிரிவு |
மக்கள்தொகை | 193,305 – 2,648,927 (2019)[1] |
பரப்புகள் | 414 km2 (160 sq mi) – 22,135 km2 (8,546 sq mi)[2] |
அரசு | தாய்லாந்து அரசாங்கம் |
உட்பிரிவுகள் | தாய்லாந்து மாவட்டங்கள் |
மூடு
மற்றும் ஒரு சிறப்பு நிர்வாகப் பகுதி (ஆங்கிலம்: Bangkok Special Administrative Area; தாய்: เขตปกครองส่วนท้องถิ่นรงถิ่นรูปแบษ), தாய்லாந்து தலைநகர் பாங்காக் (Bangkok) மாநகரைக் குறிக்கும் நிர்வாகப் பகுதியாகும்.[4][5] அனைத்து மாநிலங்களும் தாய்லாந்து நாட்டின் முதன்மையான உள்ளாட்சி அரசுகள்.