தயாக்கு மக்கள்
இந்தோனேசியாவில் உள்ள கலிமந்தனைப் பூர்வீகமாகக் கொண்ட பழங்குடியினர் / From Wikipedia, the free encyclopedia
தயாக்கு அல்லது தயாக்கு மக்கள் அல்லது டயாக் (மலாய்: Kaum Dayak; ஆங்கிலம்: Dayak People அல்லது Dyak People) என்பவர்கள் போர்னியோ தீவின் பழங்குடி மக்கள் ஆகும். இந்தப் பழங்குடி மக்களில் 200 துணை இனக்குழுக்கள் உள்ளன. அனைவரும் போர்னியோ காடுகளின் உள் பாகங்களில் வாழ்கின்றனர். இவர்கள் ஆத்திரோனேசிய மொழியை பேசுகின்றனர்.
டயாக் | |
---|---|
தயாக்கு மக்களின் ஒரு உள் இனக்குழு (இபான் மக்கள்) - அவர்களின் பாரம்பரிய உடையில் | |
மொத்த மக்கள்தொகை | |
4.6 மில்லியன் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
போர்னியோ: | |
இந்தோனேசியா | 3,009,494 |
மத்திய கலிமந்தான் | 1,029,182 |
கிழக்கு கலிமந்தான் | 351,437 |
தெற்கு கலிமந்தான் | 80,708 |
சகார்த்தா | 45,385 |
மேற்கு சாவா | 45,233 |
தெற்கு சுலவேசி | 29,254 |
பந்தென் | 20,028 |
கிழக்கு சாவா | 14,741 |
தெற்கு சுமத்திரா | 11,329 |
மலேசியா | 1,582,862 |
சரவாக் | 935,935 |
புரூணை | 30,000 |
மொழி(கள்) | |
மலாயா-பொலினீசிய மொழிகள் பெரும்பான்மை தயாக்கு மொழிகள் நிகாசு மொழி • இபான் மொழி • கிளமந்தான் • காயான் மொழிகள் • தானும் மொழி • பாரித்தோ மொழி • பாகும்பாய் மொழி • மான்யான் மொழிகள், • மூருட் மொழி • etc. மேலும் இந்தோனேசிய மொழி; மலாய் மொழி பெராவு மொழி • கூத்தாய் மலாய் மொழி • மெம்பாவா • சரவாக் மலாய் மொழி, | |
சமயங்கள் | |
பெரும்பான்மை கிறிஸ்தவம் (சீர்திருத்தத் திருச்சபை, கத்தோலிக்க திருச்சபை) (62.7%) இசுலாம் (31.6%) சிறுபான்மை காரிங்கான் (4.8%) மற்றவர் (ஆன்மவாதம்) (0.9%)[1] | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
ஆசுத்திரோனீசிய மக்கள் பஞ்சார் • போர்னியோ மலாய் மக்கள் • இரஜாங் மக்கள் • மலகசி மக்கள் |
ஒவ்வொரு துணை இனக்குழுவும், அவற்றுக்கு என சொந்தப் பேச்சுவழக்கு, பழக்க வழக்கங்கள், சமூகச் சட்டங்கள், வாழ்விடங்கள் மற்றும் கலாசார பயன்பாட்டு முறைமைகளைக் கொண்டுள்ளன. அனைத்து துணை இனக் குழுக்களிடம் பொதுவான பண்பு நலக்கூறுகளை எளிதாக அடையாளம் காண முடியும் என கூறப்படுகிறது.[2][3]
பெரும்பாலும் அனைவரும் ஆன்மவாதிகள் ஆகும். இருப்பினும் இன்றும் பலர் காரிங்கான் (Kaharingan) இந்து மதத்தையும்; நாட்டுப்புற இந்து மதங்களையும் (Folk Hindus) பின்பற்றி வருகின்றனர். 19-ஆம் நூற்றாண்டில், தயாக் மக்கள் பலர் கிறித்துவம் மற்றும் இசுலாம் மதங்களைப் பின்பற்றத் தொடங்கினர். ஏறக்குறைய 46 இலட்சம் தயாக்குகள், போர்னியோ மற்றும் சரவாக் பகுதிகளில் வாழ்கின்றனர்.[4][4][5]