டெல்டா ஏர்லைன்ஸ்
From Wikipedia, the free encyclopedia
டெல்டா எயர்லைன்ஸ் (Delta Air Lines) உலகில் மொத்தப் பயணிகள் கணக்கெடுப்பின் படி இரண்டாம் மிகுந்த விமானசேவை நிறுவனம் ஆகும். அட்லான்டாவை அடித்தளமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் உலகில் பல விமானசேவை நிறுவனங்களுடன் மிக நகரங்களை இணைக்கிறது.
| |||||||
நிறுவல் | 1924 (உஃப்-டலான்ட் டஸ்டர்ஸ் என்று பெயர்வைத்து)[1] | ||||||
---|---|---|---|---|---|---|---|
செயற்பாடு துவக்கம் | ஜூலை 17, 1929[1] | ||||||
மையங்கள் |
| ||||||
இரண்டாம் நிலை மையங்கள் |
| ||||||
கவன செலுத்தல் மாநகரங்கள் | |||||||
அடிக்கடி பறப்பவர் திட்டம் | ஸ்கைமைல்ஸ் | ||||||
கூட்டணி | SkyTeam | ||||||
கிளை நிறுவனங்கள் | காமெயர் டெல்டா ஷட்டில் டெல்டா எயர் எலீட் | ||||||
வானூர்தி எண்ணிக்கை | 451 (+51 orders) | ||||||
சேரிடங்கள் | 324 | ||||||
தலைமையிடம் | அட்லான்டா, ஜோர்ஜியா | ||||||
முக்கிய நபர்கள் | ரிச்சர்ட் ஆண்டர்சன் (CEO) எட்வர்ட் பாஸ்டியன் (தலைவர் / CFO) | ||||||
வலைத்தளம் | http://www.delta.com |
2008இல் ஏப்ரல் 14 இந்நிறுவனம் வடமேற்கு எயர்லைன்ஸ் உடன் சேரும் என்று கூறியுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் ஒன்றாக சேர்ந்தால் உலகில் மிகப்பெரிய விமானசேவை நிறுவனமாக இருக்கும்.
டெல்டா ஏர்லைன்ஸ் அமெரிக்க விமான சேவைகளில் முதன்மையான விமான சேவையாகும். இதன் தலைமையகம் ஜார்ஜியாவிலுள்ள, அட்லாண்டாவில் உள்ளது.[2] ஆறு கண்டங்களில் இது தனது விமான சேவையினை வழங்குகிறது. டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் இதன் துணை ஆட்சி நிறுவனங்கள் இணைந்து தினமும் 5,000 விமானங்களை இயக்குகிறார்கள். இந்த நிறுவனங்களில் மட்டும் சுமார் 80,000 பேர் வேலை செய்கின்றனர்.[3] இந்த விமானசேவையின் தலைமையகம் ஹர்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தில் உள்ளது. பயணிகள் செல்வது (ஆண்டிற்கு 91 மில்லியன் பயணிகள் செல்கின்றனர்) மற்றும் விமான தரையிறக்கம் மற்றும் விமான மேலேற்றம் அடிப்படையில் இந்த விமான நிலையம் உலகிலேயே மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையம் ஆகும்.
மேலும் டெல்டா விமான சேவையின் தொழில்நுட்ப செயல்பாடுகளின் தலைமையகமும் இதுவே.[4] ஆரம்பிக்கப்பட்ட தேதி மற்றும் நிறுவப்பட்ட விமான சேவையின் அடிப்படையில் இது பழமையான விமானசேவைகள் வரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளது. 2011 ஆம் ஆண்டு அதிகப்படியான விமான குழுக்களைக் கொண்டுள்ள விமான சேவையாகும்.[5] 2012 ஆம் ஆண்டு அதிகப்படியான பயணிகளின் எண்ணிக்கை கொண்ட விமான சேவையும் இதுவாகும்.[6]