டார்லாக்
பிலிப்பைன்ஸ், மத்திய லூசாவில் உள்ள மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
டார்லாக் (Tarlac) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், மத்திய லூசோன் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஏழு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் டார்லாக் நகரம் ஆகும். இது 1872 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இம்மாகாணத்தில் 511 கிராமங்களும், 17 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் சுசன் யப்-சுலிட் (Susan Yap-Sulit) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 3,053.6 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக டார்லாக் மாகாணத்தின் சனத்தொகை 1,366,027 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 45ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 18ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு, ஆங்கிலம், கப்பம்பங்கன் உள்ளடங்கலாக ஐந்து பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 450 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 13ஆம் மாகாணம் ஆகும்.
டார்லாக் | |
---|---|
மாகாணம் | |
நாடு | பிலிப்பீன்சு |
பிராந்தியம் | மத்திய லூசோன் |
நேர வலயம் | ஒசநே+8 (பிசீநே) |
அதிகாரப்பூர்வ இணையதளம் |