ஜோர்ஜ் இராபர்ட் கிரே
From Wikipedia, the free encyclopedia
ஜோர்ஜ் இராபர்ட் கிரே (George Robert Gray)(8 சூலை 1808 - 6 மே 1872) என்பவர் இங்கிலாந்தினைச் சேர்ந்த விலங்கியலாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் நாற்பதொரு ஆண்டுகளாக இலண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தின் (இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்) பறவையியல் பிரிவின் தலைவராக இருந்தார். இவர் விலங்கியல் நிபுணர் ஜான் எட்வர்ட் கிரேயின் இளைய சகோதரர் மற்றும் தாவரவியலாளர் சாமுவேல் பிரடெரிக் கிரேயின் மகன்.
விரைவான உண்மைகள் ஜோர்ஜ் இராபர்ட் கிரேGeorge Robert Gray அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினர், பிறப்பு ...
ஜோர்ஜ் இராபர்ட் கிரே George Robert Gray அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினர் | |
---|---|
பிறப்பு | 8 சூலை1808 லிட்டில் செசுலா, இலண்டன், இங்கிலாந்து |
இறப்பு | 6 மே 1872(1872-05-06) (அகவை 63) |
துறை | பறவையியல், பூச்சியியல் |
பணியிடங்கள் | பிரித்தானிய அருங்காட்சியகம் |
அறியப்படுவது | ஜெனிரா ஆப் பேர்ட்சு (பறவைப் பேரினம்), லெப்பிடாப்பிடிரா விளக்கம் |
Author abbrev. (zoology) | ஜோ. இரா. கிரே |
மூடு
ஜோர்ஜ் கிரேயின் மிக முக்கியமான வெளியீடு டேவிட் வில்லியம் மிட்செல் மற்றும் ஜோசப் வுல்ப் ஆகியோரால் விளக்கப்பட்ட இவரது ஜெனரா ஆப் பேர்ட்ஸ் (பறவைகளின் பேரினம்)(1844-49) ஆகும். இதில் 46,000 குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.