ஜொகூர் பாரு நகரம்
மலேசியாவிலுள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
சொகூர் பாரு (மலாய்: Johor Bahru அல்லது Bandaraya Johor Bahru; (சுருக்கம்: JB); ஆங்கிலம்: Johor Bahru அல்லது City of Johor Bahru; சீனம்:新山; சாவி: جوهر بهارو) என்பது மலேசியா, சொகூர் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். சொகூர் பாரு மாவட்டத்தில் அமைந்து உள்ளது.
சொகூர் பாரு | |
---|---|
City of Johor Bahru Bandaraya Johor Bahru | |
அடைபெயர்(கள்): சே.பி. (JB) Bandaraya Selatan Southern City | |
ஆள்கூறுகள்: 01°27′20″N 103°45′40″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சொகூர் |
மாவட்டம் | சொகூர் பாரு மாவட்டம் |
தோற்றம் | 10 மார்ச்சு 1855 (தஞ்சோங் புத்திரி) |
நகராண்மை | 1 ஏப்ரல் 1977 |
மாநகர்த் தகுதி | 1 சனவரி 1994 |
அரசு | |
• வகை | உள்ளூராட்சி |
• நிர்வாகம் | சொகூர் பாரு மாநகராட்சி |
• முதல்வர் | நூர் அசாம் ஒசுமான் |
பரப்பளவு | |
• மாநகரம் | 220.00 km2 (84.94 sq mi) |
• நகர்ப்புறம் | 1,064 km2 (411 sq mi) |
• மாநகரம் | 2,217 km2 (856 sq mi) |
ஏற்றம் | 32 m (105 ft) |
மக்கள்தொகை (2020) | |
• மாநகரம் | 38,05,322 |
• அடர்த்தி | 2,259/km2 (5,850/sq mi) |
• நகர்ப்புறம் | 25,00,000 (6-ஆவது) |
• நகர்ப்புற அடர்த்தி | 1,200/km2 (3,000/sq mi) |
• பெருநகர் | 25,00,000 |
• பெருநகர் அடர்த்தி | 814/km2 (2,110/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+8 (பயன்பாட்டில் இல்லை) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 80xxx to 81xxx |
மலேசியத் தொலைபேசி எண் | 07 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | J |
இணையதளம் | www |
தீபகற்ப மலேசியாவின் தெற்கு முனையில் சொகூர் நீரிணைப் பகுதியில், அமைந்துள்ள இந்த மாநகரத்தின் பரப்பளவு 220 கி.மீ.; 2020-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி மக்கள் தொகை 3,805,322.
சொகூர் என்பது 'சவுகர்' எனும் அரபுச் சொல்லில் இருந்து வந்தது. 'விலைமதிப்பற்ற கற்கள்' என்பதற்கான அரபு மொழியாகும். மலாய் மொழியில் சொகூர் (Johor) என்றால் அணிகலன். பாரு (Bahru) என்றால் புதியது. சொகூர் பாரு எனும் இரு கூட்டுச் சொற்களின் பொருள் புதிய அணிகலன் என்பதாகும்.[1]
சொகூர் பாரு மாநகரத்தில் மட்டும் 1,711,191 பேர் வசிக்கின்றனர். இந்த மாநகரம் இசுகந்தர் புத்திரி நகரை ஒட்டியுள்ளது. சொகூர் பாரு; இசுகந்தர் புத்திரி; இரு நகரங்களையும் ஒருங்கிணைத்து இசுகந்தர் மலேசியா என்று அழைக்கிறார்கள். இரு நகரங்களின் கூட்டு மக்கள் தொகை 2,500,000. இது மலேசியாவின் இரண்டாவது பெரிய நகர்ப்புறமாகும்.[2]