ஜொகூர் சுல்தான் இசுகந்தர்
From Wikipedia, the free encyclopedia
சுல்தான் இசுகந்தர் இப்னி சுல்தான் இசுமாயில் அல்லது ஜொகூர் சுல்தான் இசுகந்தர் இசுமாயில் (ஆங்கிலம்: Sultan Iskandar ibni Almarhum Sultan Ismail; மலாய்: Sultan Iskandar ibni Sultan Ismail; சீனம்: 苏丹马末·依斯干达; 8 ஏப்ரல் 1932 – 22 சனவரி 2010); என்பவர் ஜொகூர் மாநிலத்தின் சுல்தான் ஆவார்; 1981-இல் அவரின் தந்தை சுல்தான் இஸ்மாயில் மரணத்திற்குப் பிறகு ஜொகூர் சுல்தான் பதவியில் அமர்த்தப்பட்டவர்.
ஜொகூர் சுல்தான் இசுகந்தர் இசுமாயில் Sultan Iskandar of Johor Sultan Iskandar ibni Sultan Ismail | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
மலேசியாவின் 8-ஆவது பேரரசர் | |||||||||
ஆட்சிக்காலம் | 26 ஏப்ரல் 1984 – 25 ஏப்ரல் 1989 | ||||||||
முன்னையவர் | பகாங் அகமட் சா | ||||||||
பின்னையவர் | பேராக் அசுலான் சா | ||||||||
ஜொகூர் சுல்தான் | |||||||||
ஆட்சிக்காலம் | 11 மே 1981 – 22 சனவரி 2010 | ||||||||
முன்னையவர் | சுல்தான் இசுமாயில் | ||||||||
பின்னையவர் | இப்ராகிம் இசுகந்தர் | ||||||||
பிறப்பு | (1932-04-08)8 ஏப்ரல் 1932 இசுதானா செமாயாம், ஜொகூர், ஜொகூர் பாரு, மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள் | ||||||||
இறப்பு | 22 சனவரி 2010(2010-01-22) (அகவை 77) புத்திரி மருத்துவமனை, ஜொகூர் பாரு, ஜொகூர், மலேசியா | ||||||||
புதைத்த இடம் | 23 சனவரி 2010 மமுடியா அரச கல்லறை,ஜொகூர் பாரு, ஜொகூர், மலேசியா | ||||||||
துணைவர் |
| ||||||||
குழந்தைகளின் பெயர்கள் |
| ||||||||
| |||||||||
மரபு | தெமாங்கோங் | ||||||||
தந்தை | ஜொகூர் சுல்தான் இசுமாயில் | ||||||||
தாய் | சுல்தானா உங்கு துன் அமினா | ||||||||
மதம் | இசுலாம் |
1984-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரையில், மலேசியாவின் 8-ஆவது மாமன்னராகப் பொறுப்பு வகித்தார். 2010-ஆம் ஆண்டில் இருந்து அவர் இறக்கும் வரையில் ஏறக்குறைய 29 ஆண்டுகள், சுல்தான் இசுகந்தர் இசுமாயிலின் ஆட்சி நீடித்தது. அவரின் பிள்ளைகள் மலேசியாவின் வெவ்வேறு அரசக் குடும்பங்களில் திருமணம் செய்து கொண்டனர்.
அவரின் மூத்த மகள் துவாங்கு கமாரியா மைமுனா; சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு சுலைமான் சா என்பவரை மணந்தார்; அவரின் மூத்த மகன் இப்ராகிம் இசுகந்தர், பேராக் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜா சாரித் சோபியாவை மணந்தார்; அவரின் மகள் துவாங்கு அசீசா அமினா மைமுனா இசுகந்தரியா, பகாங்கின் சுல்தான் அப்துல்லாவை மணந்தார்; அவரின் இளைய மகன் துங்கு அப்துல் மஜீத் இட்ரிஸ்; கெடா அரச குடும்பத்தைச் சேர்ந்த துங்கு தே மசுனியை மணந்தார்.