ஜேம்சு புரூக்
சரவாக் இராச்சியத்தை (Raj of Sarawak) உருவாக்கியவர் / From Wikipedia, the free encyclopedia
சர் ஜேம்சு புரூக் (ஆங்கிலம்: Sir James Brooke; மலாய்: Raja Putih Sarawak) (பிறப்பு: 29 ஏப்ரல் 1803 – இறப்பு: 11 சூன் 1868), என்பவர் போர்னியோ தீவின் வடமேற்குப் பகுதியில் சரவாக் சுல்தானகம் எனும் சரவாக் இராச்சியத்தை (Raj of Sarawak) உருவாக்கியவர்.
விரைவான உண்மைகள் ஜேம்சு புரூக் James Brooke, வெள்ளை இராஜா ...
ஜேம்சு புரூக் James Brooke | |
---|---|
வெள்ளை இராஜா | |
ஆட்சிக்காலம் | 18 ஆகஸ்டு 1842 11 சூன் 1868 |
மலேசியா | 18 ஆகஸ்டு 1842 |
முன்னையவர் | 1. சுல்தான் தெங்கா சரவாக் (Sultan Tengah) 2. பெங்கிரான் இந்திரா மக்கோத்தா முகமது சாலே Pengiran Indera Mahkota Mohammad Salleh |
பின்னையவர் | சார்லசு புரூக் |
பிறப்பு | (1803-04-29)29 ஏப்ரல் 1803 ஹூக்லி மாவட்டம், மேற்கு வங்காளம் |
இறப்பு | 11 சூன் 1868(1868-06-11) (அகவை 65) ஐக்கிய இராச்சியம் |
வாழ்க்கைத் துணைகள் | பெங்கீரான் அனாக் பத்திமா (Pengiran Anak Fatima) |
குழந்தைகளின் பெயர்கள் | 1 மகள் |
மரபு | புரூக் வம்சாவழி |
தந்தை | தோமசு புரூக் |
தாய் | அன்னா மரியா |
மதம் | கிறிஸ்துவம் |
மூடு
சரவாக் மாநிலத்தில், வெள்ளை இராஜா (Rajah of Sarawak) எனும் புரூக் பரம்பரையைத் தோற்றுவித்தவர்; அதன் முதல் ராஜாவாக சரவாக் இராச்சியத்தில் கோலோச்சியவர்; 1841-ஆம் ஆண்டில் இருந்து 1868-ஆம் ஆண்டு, அவர் இறக்கும் வரையில் சரவாக் இராச்சியத்தை ஆட்சி செய்தவர்.