ஜூலியானா (நெதர்லாந்து)
From Wikipedia, the free encyclopedia
ஜூலியானா (டச்சு ஒலிப்பு: [ˌjyliˈjaːnaː]; Juliana Louise Emma Marie Wilhelmina; 30 ஏப்ரல் 1909 – 20 மார்ச் 2004) நெதர்லாந்து அரச குடும்பத்தில் ஒருவர் ஆவார். 1948 முதல் 1980 வரை இவர் நெதர்லாந்து நாட்டின் அரசியாக இருந்தார்.[1][2]
ஜூலியானா | |||||
---|---|---|---|---|---|
ஜூலியானா 1981 ல் | |||||
நெதர்லாந்து அரசி | |||||
ஆட்சிக்காலம் | 4 செப்டம்பர் 1948 – 30 ஏப்ரல் 1980 | ||||
பதவியேற்பு | 6 செப்டம்பர் 1948 | ||||
முன்னையவர் | வில்ஹெல்மினா | ||||
பின்னையவர் | பீட்ரிக்ஸ் | ||||
Prime Ministers | See list | ||||
பிறப்பு | (1909-04-30)30 ஏப்ரல் 1909 Noordeinde Palace, The Hague, நெதர்லாந்து | ||||
இறப்பு | 20 மார்ச்சு 2004(2004-03-20) (அகவை 94) Soestdijk Palace, Baarn, நெதர்லாந்து | ||||
புதைத்த இடம் | 30 மார்ச் 2004 | ||||
துணைவர் | இளவரசர் பெர்ன்ஹார்டு of லிப்பி பீஸ்டர்பீல்டு (தி. 1937) | ||||
குழந்தைகளின் பெயர்கள் | பீட்ரிக்ஸ் இளவரசி ஐரீனி இளவரசி மார்கரீட் இளவரசி கிறிஸ்டியானா | ||||
| |||||
மரபு | ஆரஞ்சு நஸ்ஸாவ்(அரச) Mecklenburg (தந்தை வழி) | ||||
தந்தை | கோமான் ஹென்றி | ||||
தாய் | வில்ஹெல்மினா | ||||
மதம் | Dutch Reformed Church |
ஜூலியானா நெதர்லாந்து நாட்டின் ராணி வில்ஹெல்மினா மற்றும் இளவரசர் ஹென்றியின் ஒரே மகள் ஆவார். பிறப்பிலிருந்தே நெதர்லாந்தின் அரியணை வாரிசாக அறியப்பட்டவர். தனிப்பட்டமுறையில் இவருக்கு கல்வி வழங்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டு இளவரசர் பெர்ன்ஹார்டை மணந்தார். இவர்களுக்கு பீட்ரிக்ஸ், ஐரீனி, மார்கரீட், கிறிஸ்டினா என்ற நான்கு குழந்தைகள்.
அரசி ஜூலியானா கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்தில் டச்சு கிழக்கிந்திய பகுதிகளான இந்தோனேசியா மற்றும் சூரினாம் நாடுகளில் காலனியாதிக்கம் முடிவுக்குவந்தது. இவர் உலகிலேயே மிக நீண்ட காலமாக வாழ்ந்த முன்னாள் அரசி ஆவார்.