ஜில் பைடன்
2021 முதல் அமெரிக்காவின் முதல் பெண்மணி / From Wikipedia, the free encyclopedia
ஜில் ட்ரேசி ஜேக்கப்ஸ் பிடென் (Jill Tracy Jacobs Biden)[1] (பிறப்பு ஜூன் 3,1951) ஓர் அமெரிக்கக் கல்வியாளர் ஆவார். ஐக்கிய அமெரிக்காவின் 46வது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஜோ பைடனின் மனைவி[2] என்பதால் 2021 முதல் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்து வருகிறார். இவரது கணவர் துணைத் தலைவராக இருந்தபோது 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக இருந்தார். 2009 முதல், வடக்கு வர்ஜீனியா சமூகக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து வருகிறார். மேலும் ஒரு துணைக் குடியரசுத் தலைவர் அல்லது குடியரசுத் தலைவரின் மனைவியாக தனது கணவரின் பெரும்பான்மையான பதவி காலத்தில் சம்பளம் பெறும் பதவியை வகித்தவர் என நம்பப்படுகிறது.
ஜில் பைடன் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
2021 இல் ஜில் பைடன் | |||||||||||||
ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி | |||||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||||
முதல் பெண்மணியாக ஜனவரி 20, 2021 | |||||||||||||
குடியரசுத் தலைவர் | ஜோ பைடன் | ||||||||||||
முன்னையவர் | மெலனியா திரம்ப் | ||||||||||||
அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி | |||||||||||||
இரண்டாவது பெண்மணியாக ஜனவரி 20, 2009 – ஜனவரி 20, 2017 | |||||||||||||
Vice President | ஜோ பைடன் | ||||||||||||
முன்னையவர் | [லின் செனாய் | ||||||||||||
பின்னவர் | கரண் பென்ஸ் | ||||||||||||
தனிப்பட்ட விவரங்கள் | |||||||||||||
பிறப்பு | ஜில் திரேசி ஜாக்கப்ஸ் சூன் 3, 1951 (1951-06-03) (அகவை 73) ஹாம்மன்ட்டன், நியூ செர்சி, ஐக்கிய அமெரிக்க நாடுகள் | ||||||||||||
அரசியல் கட்சி | மக்களாட்சிக் கட்சி | ||||||||||||
துணைவர்கள் |
| ||||||||||||
பிள்ளைகள் | ஆஷ்லே பைடன் | ||||||||||||
உறவினர்கள் | பைடன் குடும்பம் | ||||||||||||
வாழிடம் | வெள்ளை மாளிகை | ||||||||||||
கல்வி | டெலாவேர் பல்கலைக்கழகத்தில் (இளங்கலை, கல்வியியல்) வெஸ்ட் செஸ்ட்டர் பல்கலைக்கழகம் (முதுகலை கல்வியியல்) விலனோவா பல்கலைக்கழகம் (முதுகலை) | ||||||||||||
கையெழுத்து | |||||||||||||
| |||||||||||||
ஜில் பைடன் டெலாவேர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டமும், வெஸ்ட் செஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் வில்லனோவா பல்கலைக்கழகத்தில் கல்வி மற்றும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். மேலும் டெலாவேர் பல்கலைக்கழகத்தில் கல்வியில் முனைவர் பட்டமும் பெற்றார். பதின்மூன்று ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் வாசிப்பைக் கற்பித்தார். மனநல மருத்துவமனையில் உணர்ச்சி குறைபாடுகள் உள்ள இளம் பருவத்தினருக்கு கற்பித்தார். இதைத் தொடர்ந்து, டெலாவேர் தொழில்நுட்பம் & சமூகக் கல்லூரியில் பதினைந்து ஆண்டுகள் ஆங்கிலம் மற்றும் எழுத்து பயிற்றுவிப்பாளராக இருந்தார்.