ஜான் நாசு (கட்டிடக்கலைஞர்)
From Wikipedia, the free encyclopedia
ஜான் நாசு (John Nash - (18 சனவரி 1752 – 13 மே 1835)) ஒரு பிரித்தானியக் கட்டிடக்கலைஞர். நான்காம் ஜார்ச் பதில் அரசனாக இருந்த காலத்திலும் பின்னர் அரசராக இருந்த காலத்திலும் இலண்டனில் பெரும்பாலான அரச கட்டிடங்களுக்கான திட்டங்களுக்கு இவரே பொறுப்பாக இருந்தார். ராயல் பவிலியனும், பக்கிங்காம் அரண்மனையும் பெயர் பெற்ற இவரது கட்டிடங்கள். பக்கிங்காம் அரண்மனையின் ஒரு பகுதியின் முகப்பு 20ம் நூற்றாண்டில் அசுட்டன் வெப் என்பவரால் திருத்தியமைக்கப்பட்டது. நாசின் பெரும்பாலான கட்டிடங்கள் கட்டிடக் கட்டுனரான யேம்சு பர்ட்டன் என்பவரால் கட்டப்பட்டவை. ரீஜன்ட் தெருத் திட்டத்தின்போது நாசு நிதி நெருக்கடியில் இருந்த காலங்களில் பர்ட்டன் நாசுக்கு உதவி செய்துள்ளார். இதற்குப் பதில் உதவியாக பர்ட்டனின் மகனான டெசிமசு பர்ட்டன் ஒரு கட்டிடக் கலைஞராக வளர்வதற்கு நாசு உதவினார்.
விரைவான உண்மைகள் ஜான் நாசு, தனிப்பட்ட விவரங்கள் ...
ஜான் நாசு | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1752-01-18)18 சனவரி 1752 லம்பேர்த், இலண்டன், இங்கிலாந்து |
இறப்பு | 13 மே 1835(1835-05-13) (அகவை 83) கிழக்கு கோவ்சு மாளிகை, வைட் தீவு, இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
பணி | |
கட்டிடங்கள் | ரீஜன்ட் சாலை பக்கிங்காம் அரண்மனை கால்ட்டன் இல்ல டெரசு ராயல் பவிலியன் |
மூடு