ஜான் எட்வர்டு கிரே
பிரித்தானிய விலங்கியல் நிபுணர் மற்றும் தபால் சேகரிப்பாளர் (1800–1875) / From Wikipedia, the free encyclopedia
ஜான் எட்வர்டு கிரே, எஃப்ஆர்எஸ் (John Edward Gray)(12 பிப்ரவரி 1800 – 7 மார்ச் 1875) என்பார் இங்கிலாந்தினைச் சார்ந்த விலங்கியல் நிபுணர். இவர் விலங்கியல் நிபுணர் ஜியார்ஜ் இராபர்ட் கிரேயின் மூத்த சகோதரர் மற்றும் மருந்தியல் நிபுணர் மற்றும் தாவரவியலாளர் சாமுவேல் பிரடெரிக் கிரே (1766-1828) என்பாரின் மகன் ஆவார். ஜான் எட்வர்டு கிரே என்பதை ஆய்வுகளின் ஜா. எ. கிரே எனச் சுட்டப்படுகிறது. தாவரவியல் பன்னாட்டு விதிகளின் படியும் மேற்கோளக தாவரவியலில் பெயருக்கு ஜே. எ. கிரே எனக் குறிப்பிட வேண்டும். விலங்கியல் மேற்கோளுக்கும் இம்முறையே பயன்படுத்தப்படுகிறது.
பிறப்பு | 12 பிப்ரவரி 1800 வால்சால், இங்கிலாந்து |
---|---|
இறப்பு | 7 மார்ச்சு 1875(1875-03-07) (அகவை 75) இலண்டன், இங்கிலாந்து |
தேசியம் | ஆங்கிலேயர் |
கிரே 1840 முதல் 1874 கிறிஸ்துமஸ் வரை இலண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் விலங்கியல் பராமரிப்பாளராக இருந்தார். இயற்கையான வரலாற்று இருப்புக்கள் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பிரிக்கப்படுவதற்கு முன்னர் பணியாற்றினார். இவர் அருங்காட்சியக சேகரிப்பின் பல பட்டியல்களை வெளியிட்டார். இதில் விலங்கு குழுக்களின் விரிவான விளக்கங்கள் மற்றும் புதிய உயிரினங்களின் விளக்கங்கள் அடங்கும். இவர் விலங்கியல் சேகரிப்புகளை மேம்படுத்தி அவற்றை உலகின் மிகச் சிறந்தவையாக மாற்றினார்.