சைதோமிர் நகரம்
From Wikipedia, the free encyclopedia
சைதோமிர் நகரம் (Zhytomyr) உக்ரைன் நாட்டின் வடமேற்கில் அமைந்த சைதோமிர் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இந்நகரம் இரண்டு மாவட்டங்களாகப் பிரிககப்பட்டுள்ளது. இது சைதோமிர் மாகாணத்தின் நடுவில் அமைந்துள்ளது. 65 சதுர கிலோமீட்டர்கள் (25 சதுர மைல்கள்) பரப்பளவு கொண்ட சைதோமிர் நகரத்தின் 2021ம் ஆண்டின் மக்கள் தொகை 2,63,507 ஆகும்.
விரைவான உண்மைகள் சைதோமிர் நகரம், நாடு ...
சைதோமிர் நகரம் | |
---|---|
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Zhytomyr Oblast" does not exist. | |
ஆள்கூறுகள்: 50°15′0″N 28°40′0″E | |
நாடு | உக்ரைன் |
மாகாணம் | சைதோமிர் மாகாணம் |
மாவட்டம் | சைதோமிர் நகரம் |
நிறுவப்பட்ட ஆண்டு | 884 |
அரசு | |
• மேயர் | செர்கில் சுகோம்லின்[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 65 km2 (25 sq mi) |
ஏற்றம் | 221 m (725 ft) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 2,63,507 |
• அடர்த்தி | 4,100/km2 (10,000/sq mi) |
நேர வலயங்கள் | UTC+2 (குளிர்காலம்) |
UTC+3 (கோடைகாலம்) | |
அஞ்சல் குறியீடு | 10000 — 10036 |
Area code | +380 412 |
இணையதளம் | Zhytomyr |
மூடு
இந்நகரத்தின் முக்கியத் தொழில்கள் மர அறுவை தொழிற்சாலைகள், கருங்கல் மெருகூட்டும் தொழில்கள், உணவுப் பதனிடுதல், உலோகத் தொழிற்சாலைகள், இசைக் கருவிகள் தயாரித்தல் ஆகும். [2] இந்நகரத்தில் போலந்து நாட்டவர்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர். உரோமைக் கத்தோலிக்க கிறித்தவர்கள் பெரிய அளவில் வாழ்கின்றனர்.