செங்டே மலை விடுதி
From Wikipedia, the free encyclopedia
செங்டே மலை விடுதி (Chengde Mountain Resort) என்பது சீனாவின் ஏபெய் மாகாணத்திலுள்ள செங்டே நகரில் அமைந்துள்ள பேரரசின் அரண்மனைகளையும், தோட்டங்ளையும் கொண்ட ஓர் பெரிய வளாகமாகும். சீன நிலப்பரப்புகள் மற்றும் கட்டிடக்கலைகளின் பரந்த மற்றும் அறியவகைச் சேகரிப்பின் காரணமாக, இந்த விடுதி பல வழிகளில் சீனாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பல்வேறு வகையான தோட்டங்கள், அடுக்குத் தூபிகள், கோயில்கள் மற்றும் அரண்மனைகளின் உச்சம் ஆகும்.
விரைவான உண்மைகள் யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம், அமைவிடம் ...
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
---|---|
மலை விடுதி, செங்டே | |
அமைவிடம் | செங்டே, ஏபெய் மாகாணம், சீனா |
பகுதி | மலை விடுதியும் அதன் வெளிப்புற கோயில்களும், செங்டே |
கட்டளை விதி | பண்பாட்டுக் களம்: (ii), (iv) |
உசாத்துணை | 703 |
பதிவு | 1994 (18-ஆம் அமர்வு) |
மூடு
சீனாவின் நான்கு பிரபலமான தோட்டங்களில் ஒன்றான இது, உலக பாரம்பரிய தளம், தேசிய நினைவுச்சின்ன பாதுகாப்பு பிரிவு, சீனாவில் 5 ஏ வகுப்பு சுற்றுலா தலங்களில் அடங்கும். [1]