சுவாச நோய்
From Wikipedia, the free encyclopedia
சுவாச நோய் (Respiratory disease) என்பது ஒரு மருத்துவச் சொல்லாகும். இது உயர் உயிரினங்களில் சுவாசக்குழாய், தொண்டை, மூச்சுக்குழாயின் இரு பிரிவுகள், மூச்சு சிறுகுழாய், மூச்சுச் சிற்றறைகள், புடைச்சவ்வவு, புடைக்குழி மற்றும் சுவாசத்துடன் தொடர்புடைய நரம்புகள் மற்றும் தசைகள் போன்ற வாயு பரிமாற்றத்தை மேற்கொள்ளும் உறுப்புக்கள் மற்றும் திசுக்களைப் பாதிக்கும் நோயியல் நிலையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. சுவாசநோய்கள் சாதாரண சளி போன்ற சுயமாக கட்டுப்படுத்தும் நோய்களில் இருந்து பக்றீரியா நிமோனியா, நுரையீரல் இரத்தக்குழாய் அடைப்பு மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற வாழ்க்கையை அச்சுறுத்தும் நோய்கள் வரை காணப்படுகின்றன.
சுவாச நோய் Respiratory Disease | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | Pulmonology |
ஐ.சி.டி.-10 | J00.-J99. |
ஐ.சி.டி.-9 | 460-519 |
ம.பா.த | D012140 |
நுரையீரலைப் பற்றிய ஆய்வு நுரையீரலியல் எனப்படும். நுரையீரல் நோயில் சிறப்பு பெற்ற வைத்தியர், நுரையீரல் நோய் சிகிச்சை வல்லுநர், மார்பு மருத்துவ வல்லுநர் அல்லது நெஞ்சுக்கூடு மருத்துவ வல்லுநர் என அறியப்படுகின்றது.
நோய் ஏற்படுத்தும் உறுப்பு அல்லது திசு அடிப்படையில், அறிகுறிகளின் அடிப்படையில், நோய் ஏற்படும் காரணங்களின் அடிப்படையில் போன்ற பல்வேறு வழிகளில் சுவாசநோய்கள் வகைப்படுத்தப்படுகின்றன.