சீனா கிழக்கத்திய வான்வழி விமானம் 5735
2022, மார்ச் 21 அன்று மக்கள் சீனக் குடியரசில் விபத்துக்கு உள்ளான விமானம் / From Wikipedia, the free encyclopedia
சீனா கிழக்கத்திய வான்வழி விமானம் 5735 (China Eastern Airlines Flight 5735) சீனாவின் குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்கு இயக்கப்படும் திட்டமிடப்பட்ட உள்நாட்டு பயணிகள் விமானமாகும். 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 21 அன்று இவ்விமானம் குவாங்சியில் உள்ள வுயோ மாகாணத்தின் டெங் மாவட்டத்தில் செங்குத்தாக கீழே இறங்கி தரையில் மோதி விபத்திற்கு உள்ளானது.[4] விமானத்தில் 123 பயணிகளும் 9 பணிக்குழுவினரும் இருந்ததாக சீன விமானப் போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.[2] உயிர் பிழைத்தவர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. தேடல் மற்றும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.[5]
விரைவான உண்மைகள் Incident சுருக்கம், நாள் ...
பி-1791, விபத்தில் சிக்கிய விமானம், ஆங்காங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் அருகில் 2015 புகைப்படம். | |
Incident சுருக்கம் | |
---|---|
நாள் | மார்ச்சு 21, 2022 (2022-03-21) |
சுருக்கம் | நிலத்தில் மோதி விபத்து. விசாரணையில் உள்ளது |
இடம் | செண்ட்டாங்பியோ, மொலாங்கு கிராமம், தெங் மாகாணம், உசௌ, குவாங்சி, சீனா[1] 23°17′10″N 111°07′30″E |
பயணிகள் | 123[2] |
ஊழியர் | 9[2] |
உயிரிழப்புகள் | 132 |
தப்பியவர்கள் | 0 |
வானூர்தி வகை | போயிங்கு 737 |
இயக்கம் | சீன கிழக்கத்திய யுனான் வான்வழி நிறுவனம் |
வானூர்தி பதிவு | B-1791 |
பறப்பு புறப்பாடு | குன்மிங் சாங்சுய் பன்னாட்டு விமான நிலையம்[3] |
சேருமிடம் | குவாங்சோ பையுன் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
மூடு