சார்லசு வைனர் புரூக்
புரூக் பரம்பரையில்; மூன்றாவது இராஜாவாக சரவாக் இராச்சியத்தை ஆட்சி செய்தவர் / From Wikipedia, the free encyclopedia
வைனர் புரூக் அல்லது சார்லஸ் வைனர் புரூக் (ஆங்கிலம்: Vyner Brooke அல்லது Sir Charles Vyner de Windt Brooke; மலாய்: Raja Putih Charles Vyner Brooke) (பிறப்பு: 26 செப்டம்பர் 1874 – இறப்பு: 9 மே 1963), என்பவர் சரவாக் மாநிலத்தில், வெள்ளை இராஜா எனும் புரூக் பரம்பரையில்; மூன்றாவது இராஜாவாக சரவாக் இராச்சியத்தை ஆட்சி செய்தவர்; இவரே வெள்ளை இராஜா பரம்பரையில் கடைசி இராஜாவாகும்.[1]
விரைவான உண்மைகள் சார்லஸ் வைனர் புரூக் Charles Vyner Brooke, மூன்றாவது வெள்ளை இராஜா ...
சார்லஸ் வைனர் புரூக் Charles Vyner Brooke | |
---|---|
மூன்றாவது வெள்ளை இராஜா | |
ஆட்சிக்காலம் | 24 மே 1917 – 1 சூலை 1946 |
முன்னையவர் | சார்லசு புரூக் (Charles Brooke) |
பின்னையவர் | முடியாட்சி அகற்றல் சார்லஸ் ஆர்டென் கிளார்க் (Charles Arden-Clarke) பிரித்தானிய சரவாக் முடியாட்சி யாங் டி பெர்துவா சரவாக் |
பிறப்பு | சார்லஸ் வைனர் டி விண்ட் ப்ரூக் (Charles Vyner de Windt Brooke) (1874-09-26)26 செப்டம்பர் 1874 கிரீன்விச், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
இறப்பு | 9 மே 1963(1963-05-09) (அகவை 88) லண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
வாழ்க்கைத் துணைகள் | சில்வியா பிரெட் (Sylvia Brett) |
குழந்தைகளின் பெயர்கள் | 3 மகள்கள் 1. லியோனோரா மார்கரெட் புரூக் (Leonora Margaret Brooke) 2. எலிசபெத் புரூக் (Elizabeth Brooke) 3. நான்சி வாலரி புரூக் (Nancy Valerie Brooke) |
மரபு | புரூக் வம்சாவழி |
அரசமரபு | வெள்ளை இராஜா |
தந்தை | சார்லசு புரூக் |
தாய் | மார்கரெட் புரூக் |
மதம் | கிறிஸ்துவம் |
மூடு
இவர் வெள்ளை இராஜா புரூக் பரம்பரையில் இரண்டாவது இராஜாவான சார்லசு புரூக் என்பவரின் மூத்த மகனாவார். இவரின் தம்பியின் பெயர் பெர்த்திராம் புரூக். சரவாக்கின் துவான் மூடா (Tuan Muda of Sarawak) பதவி வகித்தவர். தாயாரின் பெயர் இராணி மார்கரெட் ஆலிஸ் லிலி டி விண்ட் (Ranee Margaret Alice Lili de Windt). இவர் 24 மே 1917 தொடங்கி 1 சூலை 1946 வரையில் 29 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.[2]