சார்லசு புரூக்
புரூக் பரம்பரையில் இரண்டாவது இராஜா / From Wikipedia, the free encyclopedia
சார்லசு புரூக் (ஆங்கிலம்: Charles Brooke அல்லது Charles Anthoni Johnson Brooke; மலாய்: Raja Putih Charles Brooke) (பிறப்பு: 3 சூன் 1829 – இறப்பு: 17 மே 1917), என்பவர் சரவாக் மாநிலத்தில், வெள்ளை இராஜா எனும் புரூக் பரம்பரையில் இரண்டாவது இராஜாவாக சரவாக் இராச்சியத்தை ஆட்சி செய்தவர்; 3 ஆகஸ்டு 1868 தொடங்கி 17 மே 1917 வரையில் 49 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்.[1]
விரைவான உண்மைகள் சார்லசு புரூக் Charles Brooke, இரண்டாவது வெள்ளை இராஜா ...
சார்லசு புரூக் Charles Brooke | |
---|---|
இரண்டாவது வெள்ளை இராஜா | |
ஆட்சிக்காலம் | 3 ஆகஸ்டு 1868 17 மே 1917 |
முன்னையவர் | ஜேம்சு புரூக் (James Brooke) |
பின்னையவர் | சார்லசு வைனர் புரூக் |
பிறப்பு | சார்லஸ் அந்தோனி ஜான்சன் (1829-06-03)3 சூன் 1829 பெரோ விகாரேஜ், சோமர்செட், இங்கிலாந்து |
இறப்பு | 17 மே 1917(1917-05-17) (அகவை 87) ஐக்கிய இராச்சியம் |
வாழ்க்கைத் துணைகள் | 1. மார்கரெட் ஆலிஸ் லிலி டி விண்ட் (Margaret Alice Lili de Windt) 2. டாயாங் மஸ்தியா பிந்தி அபாங் அயிங் (Dayang Mastiah binti Abang Aing) |
குழந்தைகளின் பெயர்கள் | 6 பேர் சார்ல்ஸ் வைனர் புரூக் (1917–1946); பெர்த்திராம் புரூக் (1917–1946) |
மரபு | புரூக் வம்சாவழி |
அரசமரபு | வெள்ளை இராஜா |
தந்தை | பிரான்சிஸ் ஜான்சன் |
தாய் | எம்மா ஜான்சன் |
மதம் | கிறிஸ்துவம் |
மூடு
சரவாக் இராச்சியத்தை உருவாக்கிய ஜேம்சு புரூக் (James Brooke) என்பவர் உறவு முறையில் சார்லசு புரூக்கின் மாமா ஆகும்.