சார்சு
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
தீவிர கடிய மூச்சியக்க கூட்டறிகுறி (Severe acute respiratory syndrome என்பதன் ஆங்கிலச் சுருக்கம் சார்சு) அல்லது கடுஞ்சுவாசக் கோளாறு ஓர் வழமையற்ற நுரையீரல் அழற்சி நோயாகும். இந்த மூச்சியக்க நோய் சார்சு கொரோனா தீ நுண்மத்தால் (SARS-CoV) மனிதர்களுக்கு ஏற்படுகிறது.[1] இது நவம்பர் 2002க்கும் சூலை 2003க்கும் இடைப்பட்டக் காலத்தில் ஆங்காங்கில் காணப்பட்ட இந்த நோய் திடீர் நோய்ப்பரவலாகி உலகளவில் 8,422 பேர் பாதிக்கப்பட்டு 916 பேர் உயிரிழந்தனர்.[2]உலக சுகாதார அமைப்பு நோயாளிகளில் 10.9% பேர் உயிரிழந்ததாக மதிப்பிட்டுள்ளது.[3] நோய் உண்டான சில வாரங்களிலேயே 37 நாடுகளுக்கு இந்நோய் பரவியது [4]
தீவிர கடிய மூச்சியக்க கூட்டறிகுறி | |
---|---|
இக்கூட்டறிகுறியின் காரணியான சார்சு கொரோனா தீநுண்மம் (SARS-CoV). | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | pulmonology, infectious diseases, நுண்ணுயிரியல் |
ஐ.சி.டி.-10 | U04. |
ஐ.சி.டி.-9 | 079.82 |
நோய்களின் தரவுத்தளம் | 32835 |
ஈமெடிசின் | med/3662 |
பேசியண்ட் ஐ.இ | சார்சு |
ம.பா.த | D045169 |
இன்றளவில் இந்த நோய் முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சூன் 2003க்குப் பிறகு எந்த மனிதருக்கும் இந்நோய் ஏற்படவில்லை. இருப்பினும், பெரியம்மை போல இந்நோய் முற்றிலும் அழிக்கப்பட்டதாகக் கூற இயலாது; இதன் இயற்கை தேங்குமிடங்களான விலங்கினங்களில் இன்னும் இருப்பதால் எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் மனிதருக்கு தொற்று ஏற்பட தீ வாய்ப்புண்டு.
நோயுற்றவரில் இறப்பவரின் சதவீதம் 24 வயதுக்கு குறைந்தவர்களுக்கு 1% ஆகவும், 25இலிருந்து 44 வரை உள்ளோருக்கு 6% ஆகவும் 45 முதல் 64 வயதுடையோருக்கு 15% ஆகவும் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு 50% க்கும் கூடுதலாகவும் உள்ளது.[5] ஒப்புமைக்காக, நுரையீரல் அழற்சியில் இறப்பு வீதம் வழமையாக ஏறத்தாழ 0.6% (முக்கியமாக வயதானோரில்)ஆக உள்ளது; புதிய தீ நுண்ம பரவல்களில் இது 33% வரை உயரக்கூடும்.