சாக்குலைனா
ஒரு நண்டு இனம் / From Wikipedia, the free encyclopedia
சாக்குலைனா (Sacculina) என்னும் கொட்டலசு, கடல் நண்டின் உடலில் ஒட்டிக் கொண்டு இருக்கும் புற ஒட்டுண்ணி ஆகும். கடல் நண்டுகளைப் பற்றிக்கொண்டு, அவற்றின் உடலிலே ஒட்டிக்கொண்டு, முக்கியமாக இரத்தத்திலிருந்து, தனக்குத் தேவையான உணவுப்பொருளை உறிஞ்சி வாழும் இயல்புடைய ஒட்டுண்ணி ஆகும். கடல் நண்டுகளில் பாதிக்கும் மேற்பட்ட உயிரினங்களில், இந்த ஒட்டுண்ணிகள் காணப்படுகின்றன.[2][3] சாக்குலைனா ஓட்டுண்ணி ஆயினும், உருவே தெரியாதபடி, மிகவும் மாறுதல் அடைந்த உருவத்தினைப் பெற்றிருக்கிறது. இந்த ஒட்டுண்ணிக்கு உணவுப்பாதையோ, இதயமோ, கண்போன்ற உறுப்புக்களோ இல்லை. உருவம் இல்லாத, ஒரு பை போன்ற கழலையாக மாறி, அமைந்து இருக்கும்.
விரைவான உண்மைகள் சாக்குலைனா, உயிரியல் வகைப்பாடு ...
சாக்குலைனா | |
---|---|
Sacculina carcini (highlighted) attached to a female Liocarcinus holsatus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | Hexanauplia |
துணைவகுப்பு: | Thecostraca |
உள்வகுப்பு: | |
பெருவரிசை: | Rhizocephala |
வரிசை: | Kentrogonida |
குடும்பம்: | Sacculinidae |
பேரினம்: | Sacculina Thompson, 1836 |
மாதிரி இனம் | |
Sacculina carcini Thompson, 1836 [1] |
மூடு