சளி
From Wikipedia, the free encyclopedia
சளி ( /ˈmjuːkəs/ MEW-kəs) ஒரு பல்பகுதியம் (Polymer) . இது வழுவழுப்பான திரவ சுரப்பு ஆகும். சளி சவ்வுகளில் உள்ள சளி சுரப்பி செல்களில் உற்பத்தியாகிறது. இருப்பினும் இது கலப்பு சுரப்பிகளில் இருந்து உருவாகலாம், இது சீரஸ் மற்றும் சளி செல்கள் ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும். இது ஒரு பிசுபிசுப்பு கொண்ட கூழ்மம். கனிம உப்புக்கள் , கிருமி நாசினி நொதிகள் (லைசோசைம் ), இம்யுனோகுளோபுலின்கள் , மற்றும் லாக்டோஃபெர்ரின் [1] போன்ற கிளைக்கோபுரதம் மற்றும் மியூசின்கள் காணப்படுகின்றன. சளிச் சவ்வில் உள்ள கோப்லட் செல்கள் மற்றும் கீழ்சளிசுரப்பு கோளங்களில் (submucosal glands) உற்பத்தி செய்யப்படுகின்றன. சுவாச குழாய் , இரைப்பை குடற்பாதை , சிறுநீரக இனப்பெருக்க மண்டலம் , பார்வை மற்றும் கேள்வி அமைப்புகளில் உள்ள எபிலீரியல் செல்களை (குழாய்களில் உள்ள) பாதுகாக்க உதவுகிறது. நீர்நில வாழ்வன ; மற்றும் செவுள்கள் உள்ள மீன் போன்றவைகளில் நோய்க்காரணிகளான பூஞ்சை , பாக்டீரியா [2] மற்றும் வைரஸ்களுக்கு எதிராக சளி சரப்புகளை உருவாக்கும் செல்கள் புற தோலில் உள்ளன. பெருபாலான சுரப்புகள் இரைகுடல் பகுதியில் சுரக்கின்றன.