கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம்
மலேசியா, சபா மாநிலத்தின் கோத்தா கினபாலு மாநகரில் அமைந்துள்ள ஒரு பன்னாட்டு வானூர்தி நிலையம் / From Wikipedia, the free encyclopedia
கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: BKI, ஐசிஏஓ: WBKK); (ஆங்கிலம்: Kota Kinabalu International Airport (KKIA); மலாய்: Lapangan Terbang Antarabangsa Kota Kinabalu) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் கோத்தா கினபாலு மாநகரில் அமைந்துள்ள ஒரு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.
விரைவான உண்மைகள் கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம்Kota Kinabalu International Airport, சுருக்கமான விபரம் ...
சுருக்கமான விபரம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
உரிமையாளர் | கசானா நேசனல் Khazanah Nasional | ||||||||||
இயக்குனர் | மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் Malaysia Airports Holdings Berhad | ||||||||||
சேவை புரிவது | கோத்தா கினபாலு, மேற்கு கரை, உட்பகுதி (சபா) | ||||||||||
அமைவிடம் | கெபாயான், தஞ்சோங் அரு, கோத்தா கினபாலு, சபா மலேசியா | ||||||||||
கவனம் செலுத்தும் நகரம் | |||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் ({{{utc}}}) | ||||||||||
உயரம் AMSL | 10 ft / 3 m | ||||||||||
ஆள்கூறுகள் | 05°56′41″N 116°03′31″E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2018) | |||||||||||
|
மூடு
இந்த வானூர்தி நிலையம், சபா மாநிலத்தின் மேற்கு கரை மக்களுக்கும்; உட்பகுதி மக்களுக்கும்; வானூர்திச் சேவையை வழங்கும் வானூர்தி நிலையமாக விளங்குகிறது. உள்நாட்டுச் சேவை; வெளிநாட்டுச் சேவை என இரு வகையான சேவைகளை வழங்கி வருகிறது.
2020-ஆம் ஆண்டில், இந்த வானூர்தி நிலையத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை 2,302,514. அதே வேளையில் 41,724 விமான இயக்கங்களும் நடைபெற்று உள்ளன. நகர மையத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. (5.0 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.