கோத்தன்
From Wikipedia, the free encyclopedia
ஹோட்டன் (Hotan), சீன மக்கள் குடியரசின் வடமேற்கில் உள்ள சிஞ்சியாங் மாகாணத்தின் தெற்கில் அமைந்த நகரம் ஆகும். இந்நகரத்தில் உய்குர் மொழி பேசும் இசுலாமிய இன மக்கள் அதிகமாகவும் மற்றும் மாண்டரின் மொழி பேசும் சீனர்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர். 465.84 சதுர கிலோ மீட்டர் பர்ப்பளவு கொண்ட ஹோட்டன் நகரத்தின் 2018-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 4,08,894 ஆகும். நடு ஆசியாவிற்குச் செல்லும் பட்டுப் பாதை ஹோட்டன் நகரம் வழியாகச் செல்கிறது. நவரத்தினக் கற்களுக்கான சந்தை இந்நகரத்தில் உள்ளது.
விரைவான உண்மைகள் கோத்தன் خوتەن شەھىرى和田市ஹோட்டன், கௌஸ்தானா, கோஸ்தானா, நாடு ...
கோத்தன்
خوتەن شەھىرى 和田市 ஹோட்டன், கௌஸ்தானா, கோஸ்தானா[1] | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 37°06′N 80°01′E | |
நாடு | சீன மக்கள் குடியரசு |
மாகாணம் | சிஞ்சியாங் |
பரப்பளவு | |
• மொத்தம் | 465.84 km2 (179.86 sq mi) |
ஏற்றம் | 1,382 m (4,534 ft) |
மக்கள்தொகை (2018)[3] | |
• மொத்தம் | 4,08,894 |
• அடர்த்தி | 880/km2 (2,300/sq mi) |
இனக்குழுக்கள் | |
• பெரும்பான்மையான இனக்குழு | இசுலாமிய உய்குர் மக்கள்[4] |
நேர வலயம் | ஒசநே+8 (சீன நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 839000 |
வட்டார குறியீட்டெண் | 0903 |
மொத்த உள்நாட்டு உற்பத்தி (சராசரியாக)[3] 465.84 சதுர கிலோ மீட்டர் பர்ப்பளவு கொண்ட ஹோட்டன் நகரத்தின் 2018-ஆம் ஆண்டின் மக்கள் தொகை | 2018 |
- மொத்தம் | ¥8.274 பில்லியன் $1.247 பில்லியன் |
- தனிநபர் சராசரி வருமானம் | ¥20,399 $3,076 |
- வளர்ச்சி | 7.1% |
உள்ளூர் மொழிகள் | உய்குர் மொழி, மாண்டரின் மொழி |
வாகனபதிவு | 新R |
இணையதளம் | Hotan Government Website (சீன மொழியில்) |
மூடு
லடாக் அருகில் அமைந்த இப்பகுதியில் வரலாற்றுக் காலத்தில் இந்நகரத்தில் பௌத்த கோத்தான் இராச்சியம் விளங்கியது[5]