கெர்செக் பண்பாடு
From Wikipedia, the free encyclopedia
கெர்செக் பண்பாடு அல்லது இரண்டாம் நக்காடா காலம் (Gerzeh culture or Naqada II), வரலாற்றுக்கு முந்தைய எகிப்தில் கிமு 3500 முதல் கிமு 3200 முடிய விளங்கிய புதிய கற்காலத்தியப் பண்பாடு ஆகும்.[2] இதனை இரண்டாம் நக்காடா காலம் என்றும் அழைப்பர். பண்டைய எகிப்தின் நைல் நதியின் கரையில் உள்ள பையூம் அருகில் உள்ள கெர்செக் தொல்லியல் களத்தில் இப்பண்பாட்டுக்குரிய தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதால், இப்பண்பாட்டிற்கு கெர்செக் பண்பாடு எனப்பெயராயிற்று.[3][4]
விரைவான உண்மைகள் கெர்செக் பண்பாடு / இரண்டாம் நக்காடா காலம் (கிமு 3500—3200), காலப்பகுதி ...
கெர்செக் பண்பாடு / இரண்டாம் நக்காடா காலம் (கிமு 3500—3200) | |
---|---|
[[File: கெர்செக் பண்பாடு / நக்காடா II | |
காலப்பகுதி | புதிய கற்காலம் |
காலம் | ஏறத்தாழ கிமு 3,650 முதல் கிமு 3,300 முடிய[1] |
முக்கிய களங்கள் | கெர்செக் |
முந்தியது | முதலாம் நக்காடா காலம் |
பிந்தியது | மூன்றாம் நக்காடா காலம் |
மூடு
கெர்செக் பண்பாடு ஒரு பொருள்சார் பண்பாடு என தொல்லியல் அறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர். அமராத்தியப் பண்பாட்டிற்குப் பின்னர் பண்டைய் எகிப்தில் நிலவிய கெர்செக் பண்பாட்டிற்குப் பின்னர், எகிப்தின் துவக்க கால வம்ச காலத்தில் மூன்றாம் நக்காடா பண்பாடு அல்லது செமைனியப் பண்பாடு நிலவியது.
- மனிதத் தலைக் கொண்ட மரச்சீப்பு
- பெண்ணின் சிற்பம்
- தந்தத்தாலான கலைப்பொருட்கள்
- மட்பாண்டத்தின் மீதான ஓவியங்காள், கிமு 3500-3200