கூடாட் மாவட்டம்
மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கூடாட் மாவட்டம்; (மலாய்: Daerah Kudat; ஆங்கிலம்: Kudat District) என்பது மலேசியா, சபா மாநிலம், கூடாட் பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். கூடாட் மாவட்டத்தின் தலைநகரம் கூடாட் (Kudat Town).[1]
விரைவான உண்மைகள் கூடாட் மாவட்டம், நாடு ...
கூடாட் மாவட்டம் | |
---|---|
Kudat District | |
சபா | |
ஆள்கூறுகள்: 6°53′00″N 116°50′00″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | கூடாட் |
தலைநகரம் | கூடாட் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,287 km2 (497 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 83,140 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 89050 |
மலேசியத் தொலைபேசி எண் | +60(88) 61XXXX; +60 (88) 61XXXX; (88) 62XXXX |
மலேசிய வாகனப் பதிவெண்கள் | SD |
இணையதளம் | www.sabah.gov.my/pd.kdt www.sabah.gov.my/lbk/ |
மூடு
கூடாட் நகரம், போர்னியோவின் முதல் தலைநகரமாகவும், 19-ஆம் நூற்றாண்டில் பரபரப்பான வர்த்தக நிலையமாகவும் விளங்கியதாக அறியப் படுகிறது. இந்த நகரம், சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து வடக்கே 190 கி.மீ. தொலைவில்; கூடாட் தீபகற்பத்தில் அமைந்து உள்ளது.[2]