கூடாட்
மலேசியா, சபா, கூடாட் மாவட்டத்தின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
கூடாட் என்பது (மலாய்: Pekan Kudat; ஆங்கிலம்: Kudat Town; சீனம்: 博福特) மலேசியா, சபா மாநிலம், கூடாட் பிரிவு, கூடாட் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.
கூடாட் நகரம் | |
---|---|
Kudat Town | |
சபா | |
ஆள்கூறுகள்: 6°53′00″N 116°50′00″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | கூடாட் பிரிவு |
மாவட்டம் | கூடாட் மாவட்டம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | சப்தீன் இப்ராகிம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,287 km2 (497 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 29,025 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 89050 |
மலேசியத் தொலைபேசி | +60(88) 61XXXX; +60 (88) 61XXXX; (88) 62XXXX |
மலேசிய வாகனப் பதிவெண்கள் | SD |
சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 190 கி.மீ. தொலைவில், கூடாட் தீபகற்பத்தில் அமைந்து உள்ளது. அத்துடன் போர்னியோ தீவின் உச்ச மட்ட வடக்குப் பகுதி கிராமமான தஞ்சோங் சிம்பாங் மெங்காயாவ் (Tanjung Simpang Mengayau) கிராமத்திற்கு மிக அருகில் உள்ளது.[1]
சபா மாநிலத்திலேயே ருங்குசு (Rungus) இனக் குழுவினர் அதிகமாக வாழும் பகுதிகளில் கூடாட் நகரம் மிகப் பெரிய நகரமாகும். ருங்குசு இனக் குழுவினரின் முக்கியக் கலாசார மையமாகவும் கூடாட் நகரம் விளங்குகிறது.[2]
கூடாட் நகரத்தில் சீனர்கள் (முக்கியமாக ஹக்கா இனத்தவர்) மிகுதியாக வாழ்கிறார்கள். இவர்களைத் தவிர பிசாயா பூர்வீக இனத்தவர்களும் உள்ளார்கள். சீனர்கள் முதன்முதலில் சபாவில் குடியேறிய இடமாகவும் கூடாட் விளங்குகிறது.[2]