குளோரியா இசுடீனெம்
அமெரிக்க செயற்பாட்டாளர் மற்றும் இதழியலாளர் / From Wikipedia, the free encyclopedia
குளோரியா மாரி இசுடீனெம் (Gloria Marie Steinem, மார்ச் 25, 1934) அமெரிக்க பெண்ணியவாதி, இதழாளர், மற்றும் சமூக,அரசியல் செயற்பாட்டாளர் ஆவார். 1960களின் பிற்பகுதி 1970களில் நிகழ்ந்த பெண்களின் விடுதலை இயக்கத்தின் தலைவராக தேசியளவில் அறியப்படுகிறார். முக்கியமான எழுத்தாளராகவும் 1960களின் பண்பாட்டிற்கெதிரான அரசியல்வாதியாகவும் விளங்கும் இசுடீனெம் பல திட்டங்களையும் அமைப்புக்களையும் நிறுவியுள்ளார். தமது சமூகப்பணிக்காக பல விருதுகளையும் பெருமைகளையும் பெற்றுள்ளார். நியூயார்க் இதழில் பத்தி எழுத்தாளராக உள்ள இசுடீனெம் எம்எஸ். இதழின் இணைநிறுவனராக உள்ளார். கருக்கலைப்பு உரிமைகளுக்காக போராடி வந்த இசுடீனெம் 1969இல் எழுதிய, "கருப்பின செல்வாக்கை அடுத்து மகளிர் விடுதலை",[2] என்ற கட்டுரை மூலம் நாடெங்கும் பெண்ணியத் தலைவராக புகழ்பெற்றார்.
குளோரியா ஸ்டீனெம் | |
---|---|
மகளிர் செயற் கூட்டணி, சனவரி 12, 1972 செய்தியாளர் சந்திப்பில் இசுடீனெம் | |
பிறப்பு | குளோரியா மாரி இசுடீனெம் மார்ச்சு 25, 1934 (1934-03-25) (அகவை 90) டோல்டொ, ஒகையோ, அமெரிக்கா |
இருப்பிடம் | நியூயார்க் நகரம் |
தேசியம் | அமெரிக்கர் |
கல்வி | வைத் உயர்நிலைப் பள்ளி |
படித்த கல்வி நிறுவனங்கள் | இசுமித் கல்லூரி[1] |
பணி | எம்எஸ். மற்றும் நியூயார்க் இதழ்களில் எழுத்தாளர்/இதழாளர் |
சொந்த ஊர் | டோல்டொ, ஒகையோ |
அரசியல் இயக்கம் | பெண்ணியம் |
இயக்குநராக உள்ள நிறுவனங்கள் | மகளிர் ஊடக மையம் |
வாழ்க்கைத் துணை | டேவிட் பேல் (2000–2003; கணவரின் மரணம்) |
கையொப்பம் | |
வலைத்தளம் | |
gloriasteinem.com |
2005இல் ஜேன் ஃபோண்டா, இராபின் மார்கனுடன் இணைந்து மகளிர் ஊடக மையம் என்ற அமைப்பை நிறுவினார்; இதன் முதன்மை நோக்கம் பெண்களின் குரலை வலுப்படுத்தும் வண்ணம் வக்காலத்து, ஊடகம் மற்றும் தலைமைப் பண்பிற்கான பயிற்சி வழங்குவதும் போதிய உள்ளுரையை உருவாக்குவதுமாகும். இந்த அமைப்பின் மேலாண் வாரியத்தில் தற்போது பணிபுரிகிறார். .
2013இல் கருக்கலைப்பு உரிமைகளுக்காக போராடியதைப் பாராட்டி பராக் ஒபாமா குடியரசுத் தலைவரின் விடுதலைக்கான பதக்கத்தை வழங்கியுள்ளார்.[3]