குளோயி கிரேசு மொரெட்சு
அமெரிக்க நடிகை (பிறப்பு 1997) / From Wikipedia, the free encyclopedia
குளோயி கிரேசு மொரெட்சு (ஆங்கிலம்: Chloë Grace Moretz; /məˈrɛts/;[1] பிறப்பு - பிப்ரவரி 10, 1997) ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகை ஆவார். நான்கு எம்டிவி விருதுகள், இரண்டு பீப்பிள்சு சாய்சு விருதுகள், இரண்டு சனி விருதுகள், மற்றும் இரண்டு குழந்தை நடிகர்கள் விருதுகள் ஆகியவற்றை வென்றுள்ளார்.
விரைவான உண்மைகள் குளோயி கிரேசு மொரெட்சுChloë Grace Moretz, பிறப்பு ...
குளோயி கிரேசு மொரெட்சு Chloë Grace Moretz | |
---|---|
2018 இல் குளோயி கிரேசு மொரெட்சு | |
பிறப்பு | பெப்ரவரி 10, 1997 (1997-02-10) (அகவை 27) அட்லான்டா, ஜோர்ஜியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2004–தற்காலம் |
மூடு
சிறுவயதிலிருந்தே நடிக்கத் துவங்கியுள்ளார். நாடகத் தொடர் டெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸ் (2006–07) இல் நடித்துள்ளார். 500 டெய்சு ஆப் சம்மர் (2009), மார்ட்டின் ஸ்கோர்செசியின் ஹியூகோ (2011), மூவி 43 (2013), த ஈகுவலைசர் (2014) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2] 2010 இல் வெளிவந்த கிக்-ஆசு மீநாயகன் திரைப்படத்தினால் பெரிதும் பிரபலமானார்.