குரோட் இரெபெர்
அமெரிக்க வானியலாளர் / From Wikipedia, the free encyclopedia
குரோட் இரெபெர் (Grote Reber) (திசம்பர் 22, 1911 – திசம்பர் 20, 2002) கதிர்வீச்சு வானியல் முன்னோடியாவார். இதில் இவரது பயில்நிலை வானொலி, பயில்நிலை வானியல் ஆர்வங்கள் இணைந்து வெளிப்பட்டன. இவர் கார்ல் யான்சுகியின் முன்னோடி ஆய்வில் ஆழ்ந்து ஈடுபட்டு அதை மேலும் விரிவாக்கினார். இவர் வானொலிக் கதிர்வீச்சு அலைவெண்களில் முதல் வானியல் அளக்கையை மேற்கொண்டு நடத்தினார்.[1]
விரைவான உண்மைகள் குரோட் இரெபர் Grote Reber, பிறப்பு ...
குரோட் இரெபர் Grote Reber | |
---|---|
பிறப்பு | (1911-12-22)திசம்பர் 22, 1911 வீட்டன், இல்லினாயிசு, ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | திசம்பர் 20, 2002(2002-12-20) (அகவை 90) குவிசே, தாசுமேனியா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | கதிர்வீச்சு வானியல் |
கல்வி கற்ற இடங்கள் | இல்லினாயிசு தொழில்நுட்ப நிறுவனம் |
அறியப்படுவது | கதிர்வீச்சு வானியலில் முன்னோடியான பணி |
விருதுகள் | எல்லிகாட் கிரீசன் பதக்கம் (1963) |
மூடு
இவரது 1937ஆம் ஆண்டின் வானொலி அலைவெண் உணர்சட்டம்தான் வானியல் நோக்கங்களுக்காகப் பயன்பட்ட்தில் இரண்டாவதாகும். இது தான் கதிர்வீச்சுத் தொலைநோக்கியாக பயன்படுத்திய முதல் பரவளைய அலைத்தெறிப்பு உணர்சட்டமும் ஆகும்.[2] அடுத பத்தாண்டுகளுக்கு இவர் ஒருவரே கதிர்வீச்சு வானியலாலராக விளங்கினார்.[3][4]